செவ்வாய், நவம்பர் 05, 2013

அதிரடி......... தீபாவளி.......... சரவெடி



          
..........................................................................................................................
ன் மனைவிக்கும் பக்கத்துவீட்டுக்கார அம்மாவுக்கும் சண்டை நடந்துக்கொண்டிருந்தது. வெளியில் சென்றிருந்த நான் வந்ததும் என்னிடம் நியாயம் கேட்க தொடங்கினார்கள்.

“என்ன தான் இருந்தாலும் அவ அப்படி செஞ்சிருக்க கூடாது

“அப்படி என்ன நான் பொய்யா சொல்லிட்டேன். அதானே உண்மை “
 என்ன விஷயம் என்றேன்.

“பக்கத்து வீட்டுக்கு தீபாவளி பலகாரம் கொடுத்து அனுப்பினேன்.

இது நல்ல விஷயம் தானே

அவங்களும் கொஞ்ச நேரம் கழிச்சி எனக்கு திருப்பி கொடுத்து அனுப்பினாங்க.

“பின்ன அவங்க வீட்டிலேயும் செஞ்சிருப்பாங்க இல்ல.

“அவ என்ன சும்மாவா கொடுத்து அனுப்பினா கூட ஒரு லெட்டரும் 100 ரூபா பணமும்

“அட பரவாயில்லையே இது ரொம்ப புதுசா இல்ல இருக்கு

“மண்ணாங்கட்டி, எதுக்குனு கேளுங்க

“எதுக்காம் “

“என் தீபாவளி முறுக்க கடிக்க முடியாம கடிச்சு அவளுக்கு ரொம்ப நாளா விழாம இருந்த சொத்தபல்லு இப்ப இதனால விழுந்திடுச்சாம். டாக்டர் ட போனா ஊசி அது இதுனு ரொம்ப செலவு ஆகியிருக்குமாம். வலி தொல்ல வேற தாங்கி இருக்க முடியாதாம். அதுக்குதான் இந்த தேங்க்ஸ் லெட்டரும் பீஸூமாம்.


நான் : ???............!!!!!!!!!!!!!!!!!!!!
......................................................................................................................

நாள் : 31.12.2013

காய்கறி கடைகாரர் : “என்னங்க சார் எல்லா காய்கறிகளும் வாங்கறீங்க. தொட்டுக்க, பொரியல் செய்யற காய்ங்க எதுவும் வாங்கவே மாட்றீங்க.

“அட போப்பா தீபாவளிக்கு செஞ்ச முறுக்கே இன்னும் காலியாகல.அதையேதான் தினமும் சாப்பிடும்போது எடுத்து வச்சி சீக்கிறம் காலி பண்ணுங்கனு பொண்டாட்டி திட்டி தீக்கிரா. அவ பக்கத்து அக்கத்து வீட்டுக்கு கொடுத்து அனுப்பினதையே வச்சி ரிட்டன் கொடுத்திட்டாங்களாம் புது வருஷத்துக்காவது ஏதாவது மாத்தி செய்யராளுனு பார்ப்போம்


கடைக்காரர் : ?///////////
..................................................................................

ஆசிரியர் :  டேய் விரல்ல என்னடா  கட்டு ? தீபாவளி அன்னைக்கு பட்டாசு வெடிச்சு கையில கட்டு போட்டிருக்கியா  ?
மாணவன் : இல்ல சார் எங்க அம்மா செஞ்ச மைசூர் பாக்கை சுத்தியால உடைச்சேன் சுத்தி கையில அடிச்சிடுச்சி  அதான் சார் கட்டு.
ஆசிரியர் : !!!!!!!!!!!!
.......................................................................................................................

“என்ன பல் டாக்டர் தீபாவளிக்கு அப்புறம் போர்ட மாத்தி ‘பல் டாக்டர் க்கு பதிலா ‘கல் டாக்டர் னு வச்சிருக்காரு

 அதுவா தீபாவளிக்கு  அவங்க வீட்ல செய்த லட்டு ஒன்னு திண்ணாராம் அதுல இருந்த கல் ஒன்னு அவருசொத்த  பல்லு விழ காரணமா இருந்துச்சாம் அதுல இருந்து பல்ல புடுங்க வரவங்களுக்கு ஒரு லட்ட கொடுத்து கடிக்க சொல்வாராம்.உடனே பல் விழுந்துடுமாம் இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கேனு இதையே பாலோ பண்றாராம். அதான் இந்த போர்ட் மாற்றத்துக்கு காரணமாம். ..
......................................................................................................................

“என்னங்க இந்த  தீபாவளி விளம்பரத்த பாருங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு
          
 “அப்படி என்ன  வித்தியாசம் ? “

“வீடு வாங்கினா ஒரு போட் (BOAT )  இலவசமாங்க.
           
 “போட்டா அது எதுக்கு? எல்லாரும் பத்திரபதிவு, இலவசம்..நகை அப்படி இப்படி ஏதாவது தானே கொடுப்பாங்க....உண்மையிலே வித்தியாசமான கிப்ட் தான்.

“ இரு அந்த போன் நம்பருக்கு போட்டு கேப்போம்

“ஆமாங்க சார்..நல்ல பெரிய போட் தான். கூடவே எத்தனை குடும்ப உறுப்பினர்களோ அத்தனை லைப் ஜாக்கட்டும் தருவோம் ...ஏன்னா பிளாட் இருக்கிற இடம் கொஞ்ச்ச்ச்சசம் நல்ல பள்ளமான இடம்.... மழை காலங்களில் நீங்க ரோட்டுல இருந்து வீட்டுக்கு போக வேணாமா அதுக்கு தான் சார்.

குடும்ப தலைவர் :!!!!!!!!!!!!!!!!!!!!!
........................................................

தீபாவளி வாழ்த்து சொன்னதுக்கா திண்டுக்கல் சரவணன் சார் கோவிச்சுக்கிட்டாரு.

ஆமாங்க... ‘திண்டுக்கல் சரவணன் சார் னு போடறதுக்கு பதிலா புதிய பதிவர் ‘தெண்டக்கல் சரவணன் னு போட்டிருக்கார் கோபம் வராம என்ன செய்யும்.

....................................................................................

“இவ்ளோ பெரிய தமிழ் எழுத்தாளர் மேடம் கூட “தீபாவளி வாழ்த்துக்கள் னு போடறதுக்கு பதிலா “தீபாவலி வாழ்த்துக்கள் னு போட்டிருக்காங்களே அவங்களுக்கு கூட எழுத்து பிழை வரும் போல.


“அட எழுத்துப்பிழை எல்லாம் ஒன்னும் இல்லப்பா தீபாவளி அன்னைக்கு பெண்கள் படும் கஷ்டங்களை சிம்பாலிக்கா அப்படி உணர்த்தி இருப்பாங்க.
..............................................................

“அட நம்ம தி.பாண்டியன் சார் என்ன ரொம்ப குஷியா இருக்காரு.
“அவருக்கு ஏகப்பட்ட தீபாவளி வாழ்த்துக்கள் இமெயில் வந்து இருக்காம். அத நெனச்சிதான் குஷி மூடுல இருக்கார்


அட நீங்க வேற.... த.பாண்டியனு க்கு அனுப்பரதுக்கு பதிலா ஏதோ  மிஸ்டேக்கால தி. பாண்டியனுக்கு எல்லாம் போயிடுச்சு....அது தெரியாம....நீ .....வேற.
..............................................................................

என்னங்க நீங்க தீபாவளி அன்றையில இருந்து பக்கத்து தெரு பங்கஜத்தை பாலோ பண்றதா...இன்னைக்கு தான் அவ பிரண்டு எனக்கு சொன்னா ....இந்த வயசுல இது எல்லாம் வேணாங்க...


அடி இவளே ! பிளாக்ல பாலோ பன்றத சொல்லி இருப்பா
.....................................................................................................................


“அந்த அம்மா ஏன் பையன போட்டு இந்த அடி அடிக்கிறா “

“அவன் கோலி குண்டு விளையாட அந்த அம்மா செஞ்ச ரவா லட்ட கேட்டாணாம்...அதுதான் விளையாடும் போது நல்லா உடையாம இரும்பு குண்டு மாதிரி இருக்கு அப்படினு கேட்டானாம்.......அதான் “
............................................................................................................................

வாடிக்கையாளர் :- “அது என்னங்க திரி இன் ஒன் புடவை

கடைக்காரர் :- “அதுவா... தீபாவளி அன்றைக்கு ‘புடவை யா கட்டிக்கலாம். புது வருஷத்துக்குள்ள அது ‘தாவணியா மாறிடும்...அப்புறம் பொங்கலுக்கு ள் அது ‘கை குட்டை யா சுருங்கிடும் அதான் இது திரி இன் ஒன் புடவை......

வாடிக்கையாளர் :- ??????
..........................................................................................................................

புது மாப்பிளை : அன்பே உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் என்ன செய்யணும் சொல்லு....

மனைவி : முறுக்கு அச்சியில யாரு கம்மு போட்டு இப்படி ஒட்டி வச்சது எடுக்கவே முடியல.................அத கொஞ்சம் எடுத்து தாங்க....

மாப்பிள்ளை : அது கம் இல்ல நீ பிசைஞ்சி வச்ச முறுக்கு மாவு...தான்
மனைவி :!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

....................................................................................................................................

 1: “ஏய் நீ செஞ்ச பல காரத்துலே எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த     சிவப்பு கலர்ல இருந்த இனிப்பு முறுக்கு தான்...

2: “அது முறுக்கு இல்ல ஜாங்கிரி

 1: “ஹி ஹி ஹி .
.....................................................................................

“அந்த புது மாப்பிளையை மாமியார் ஏன் திட்டி துரத்திட்டாங்களாம்

“வீட்டுக்குள்ளேயே அது இது எது னு போட்டி வச்சி மாமியார் செஞ்ச பல காரங்களிலே கடிக்க முடியாதது....உடைக்க முடியாதது...தின்ன முடியாதது....அது இது எதுனு போட்டி வச்சானாம்....அதான்..
......................................................................................

“ஆரம்பம் படத்தின் திரை விமர்சனம் எழுதிய அந்த எழுத்தாளரை ஏன் அஜித் ரசிகர்கள் போட்டு அடிக்கிறங்க

“அதுவா ‘ஆரம்பம்அப்படினு எழுதரதுக்கு பதிலா ‘ஆ......ரம்பம்அப்படினு எழுதிட்டாராம்  
...................................................................................






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!