புதன், நவம்பர் 13, 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ்


                கொஞ்சம் சிரிங்க பாஸ்
               __________________________



தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு....அமைச்சரவை மாற்றம். 

இதனால் பல சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாவதாக துறை 

அலுவலர்கள் செய்தி செய்தித்தாளில் புலம்பியதை படித்ததின் விளைவு.
.................................*********************................................................


அமைச்சர் : ஏதோ வாயில வந்தத பேசிட்டேன். என் மனசுல ஒண்ணும் இல்ல....தப்பா நினச்சுக்காதீங்க

முதலமைச்சர் : நீங்க பேசுனதைப்பார்த்தா மண்டையிலயும் ஒண்ணும் இல்லனு தெரியுது. ராஜினாமா பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.
.....................................*******************.........................................

1 :  மேடையில பேசும்போது ஏன் அமைச்சர் தன் PA வை அடிக்கடி பார்த்து பேசறார் ?

2: அதுவா இன்னும் அவரு மினிஸ்டரா இருக்காரா அல்லது பதவியில இருந்து தூக்கிட்டாங்களானு தெரிஞ்சுக்க தான்.

....................................*********************.....................................................

அமைச்சரை ஏன் பதவியில இருந்து தூக்கிட்டாங்க?

அதுவா ஒருசமயம் முதலமைச்சர் எதுக்கோ ‘சொந்த சரக்கா இருக்கனும்னு சொன்னாங்கலாம். அத தப்பா புரிஞ்சிகிட்டு அவர் கள்ள சாராயம் காச்சினாராம் அதான்.
.......................................... ******************............................... 

நிருபர் : இன்றையில இருந்து நீங்க புது அமைச்சராமே.... வாழ்த்துக்கள்!

அமைச்சர் : இன்றையில இருந்து இல்ல, இன்றைக்கு புது                அமைச்சர்...அவ்வளவு தான்.

நிருபர் : ?

...............................****************..................................

“பதவி பரிபோன அமைச்சர்  ஏதோ புது பாட்டை அடிக்கடி பாடுறாராமே ?

“அதெல்லாம் ஒன்னும் இல்ல...போனால் போகட்டும் போடா இந்த 
 பதவியில் நிலையாய் வாழ்ந்தவன் யாருடா னு அப்பப்ப பாடறார் அவ்வளவுதான்.
.......................................***************....................................

‘நீங்கள் எல்லோரும் மாடுகள் போல் உழைக்க வேண்டும்.பசுவும் கன்றும் போல் பாசமுடன் இருக்க வேண்டும்...
‘என்ன கல்விஅமைச்சர் ஆசிரியர் சங்க கூட்டத்துல நிறைய கால்நடைகளை உதாரணம் காட்டி பேசறாரு

‘அதுவா இன்னைக்கு காலையில வரைக்கும் கால்நடை இலாக மந்திரியா இருந்தாரு, திடீர்னு மதியம் தான் கல்வி அமைச்சர் ஆகியிருக்காரு. பழைய பழக்க தோஷத்துல அப்படி பேசறாரு.
.............................................*************...................................

“அமைச்சர்களின் அரசாங்க காருக்கு பின்னாடியே அவங்களுக்கு சொந்தமான காரும் போகனும்னு ரூல்ஸ் ஸாம்

“எதுக்கு

“திடீர்னு அவங்க மந்திரி பதவி பரிக்கப்பட்டா அரசாங்க கார அங்கேயே விட்டுட்டு அவங்க சொந்த காருல வீட்டுக்கு போயிடனமாம்
..................................**************.......................................

“சட்ட சபையில எல்லா அமைச்சரும் ஏன் சீட்டு குலுக்கிப்போட்டு விளையாடினு இருக்காங்க

“விளையாடல. அடுத்த அமைச்சர் பதவி யாருக்கு போகப்போவுதுனு சீட்டு எடுத்து பாக்கிறாங்க
.................................******************....................

“அந்த அமைச்சருக்கு ஏன் பதவி போச்சு

“அதுவா முதலமைச்சரை புகழ்ந்து பேசும்போது இந்தியாவின் ‘பெரும் புள்ளி அப்படினு சொல்றதுக்கு பதிலா இந்தியாவின் ‘கரும்புள்ளி அப்படினு பேசிட்டாராம் “
.....................................*******************.........................................

“பதவி போனதில இருந்து நம்ம அமைச்சர் விவேக்கின் தீவிர ரசிகரா மாறிட்டார் போல

“எப்படி சொல்றீங்க

“ ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்அந்த காட்சியையே திரும்ப திரும்ப ரீவைன்ட் பண்ணி பாக்கிறாரே
...................................*********************.........................................

“அமைச்சர் நந்தகுமார் இப்ப எப்படி இருக்கார்

“பதவி போனதால நொந்தகுமாரா இருக்கார்
...............................**********************..........................

“ஏன் அமைச்சர் அந்த பத்திரிக்கை மேல ரொம்ப கோவமா இருக்கார்

அப்பாவி அமைச்சர் னு போடறதுக்கு பதிலா ‘அப் பாவி அமைச்சர் னு போட்டுட்டாங்களாம். ஏதோ தப்பு பண்ணியதால தான் அப்படி போட்டிருக்குனு அவரை பதவியில இருந்து தூக்கிட்டாங்களாம்
.............................***********************.....................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!