செவ்வாய், அக்டோபர் 29, 2013

பழமொழிகள்   “சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும் .

இந்த பழமொழிக்கான வாரியார் சுவாமிகள் அளித்த விளக்கம்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஷஷ்டியில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால்
அகப்பையில் (கருப்பையில்) குழந்தை பாக்கியம் தானே உண்டாகும்.
என்பதனை குறிக்கும் விதமாக உண்டான பழ மொழி
“ஷஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
 ஆகும். ஆனால் காலப்போக்கில் மருவி சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் என மாறி விட்டது.
                           -படித்ததில் பிடித்தது.
............................................................................................................................
இப்ப மேட்டருக்கு வாங்க.
“சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்
அட இந்த பழமொழியும் நல்லாதானய்யா இருக்கு.
(திரு சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிங்க).
இப்ப என்னையே எடுத்துக்குங்க. எதுக்கோ உட்கார்ந்தேன். திடீர்னு ஒரு யோசனை. இத பதிவா போடலாம்முனு.ஏன்னா சட்டியில (மண்டையில) ஒண்ணும் தோணல (இருந்தா தானே). அதனால ஆப்பையில (அதாங்க நம்ம பேஸ் புக்கு.பக்கம்..... பிளாக் பக்கம்) இத்தனை நாள் நான் வரலை.
அட நமக்குனே ஒரு நல்ல பழமொழி கண்டு பிடிச்சி வச்சிருக்காங்கய்யா..................................
ஆக இப்படியாக நமக்குனே உருவான பல பழமொழிகளை கண்டு பிடித்து நல்ல நல்ல கருத்துகளை கூறுங்கள் தோழமைகளே.........
www.kingrajasc.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!