செவ்வாய், நவம்பர் 26, 2013

கவுண்டமணி ரீஎண்ட்ரி


             

பாடல் :  ஆயிரம் நிலவே வா.......

கவுண்டர் : அமாவாசை அதுவுமா பாட்டப்பாரு........டேய் போய் நல்ல கண் டாக்டரா பாருடா.. இருக்கறதே ஒண்ணு.... அதுவும் இன்னைக்கு வரல...
.ஆயிரம் நிலவே வாவாம்.... பத்தாயிரம் நிலவே வாவாம்...
>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.........

கவுண்டர் : அந்த மூஞ்சை பாக்க முடியாம தான் வேற ஊருக்கே ஓடி வந்தேன் .....இங்கியும் வந்து பாட்டா பாடற. படவா ராஸ்கல்.
>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : காதல் கசக்குதய்யா.................

கவுண்டர்: கொஞ்சம் சக்கரைய தூக்கலா போட சொல்லு... அப்ப தித்துக்கும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : இஞ்சி இடுப்பழகி...

கவுண்டர் : ஆமா இஞ்சி இடுப்பழகி...... வெண்டக்கா விரலழகி......  மீன் கண்ணழகி...பொண்ண பொண்ணா மட்டும் பாக்காதீங்க.
>>>>>>>>>>>>>>> 

பாடல் : ஆப்பிள் பெண்ணே நீயாரோ......
கவுண்டர்: ஆப்பிள் போன் நிறுவனர் பொண்ணு......போ போயி பொண்ணு கேளு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : எங்கேயோ பார்த்த மயக்கம்..........

கவுண்டர் : ஆமா ஒருவேளை டாஸ்மாக்கல பார்த்திருப்பியோ. அங்க தான் மயக்கமா இருந்திருப்ப..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 


பாடல் :  தோழியா என் காதலியா யாரடி நீ பெண்ணே.....

கவுண்டர் : அடி செருப்பால மூனு மாசத்துக்கு முன்னாடி கடன் வாங்கினியே அவன் பொண்டாட்டிடா அவ.
>>>>>>>>>>>>>> 

பாடல் :  வாங்கண்ணா வணக்கங்கண்ணா..... மை சாங் க நீ கேளுங்கண்ணா......

கவுண்டர் : வணக்கம் தம்பி, சாங்கெல்லாம் இருக்கட்டும். வாங்கின கடன எப்ப திருப்பி தரப்போர அத சொல்லு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : போவோமா ஊர்கோலம்....பூலோகம் எங்கெங்கும்......

கவுண்டர் : எங்க வேணா போலாம்மா.... அது என்ன கல்யாண ஊர்கோலமா...இல்ல சாவு ஊர்கோலமா...அத மொதல்ல சொல்லு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>..

பாடல் : காற்று வாங்க போனேன்......

கவுண்டர் : இவரு பெரிய காத்து வியாபாரி.....காத்து வாங்க போனாரு.
கடங்காரனுக்கு பயந்து கடல் பக்கம் ஓடியிருப்ப நாயே ......பாட்டப்பாரு பரோட்டா வாயனுக்கு..........
>>>>>>>>>>>>>>>>>>.

பாடல் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா............

கவுண்டர் : அதெல்லாம் தெரியும்மா ....நீ கடன் வாங்கின தொகை ரொம்ப அதிகமாச்சே அதான் மறக்க முடியல.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : என்ன சத்தம் இந்த நேரம்..............
கவுண்டர் : அது ஒண்ணுமில்லடா தேங்கா தலையா.... திருடன் வந்து பூட்டை உடைக்கிறான்.....நீ போய் பன்னி மாதிரி திரும்ப தூங்கு......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பாடல் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை.........
கவுண்டர் : இப்படியே அவ பின்னால பாடினு போனா கொஞ்சநேரத்துல...
 ஹை ஹீல்ஸ்சு செருப்பால அடிக்காத நீ என்னை னு பாடினு வருவ.
..........................................................................................................................................................


                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!