சனி, நவம்பர் 23, 2013

இது உங்கள் சொத்து



       



பாவம் புண்ணியம்
பாராட்டு புகழ் இவற்றை தாங்கிய
பூத உடல்கள்
புதைக்கப்பட்ட இடம்.


இறந்த காலத்தில்
இறந்தவர்களை நினைத்து
இறக்கப்போகும்
வருங்கால பிணங்கள்
வணங்கி செல்லுமிடம்.


மேதை பேதை
ஏழை பணக்காரன்
தலைவன் தொண்டன்
உயர்ந்தஜாதி தாழ்ந்தஜாதி
எல்லாம் பிணங்கள் என்று
சமத்துவம் போதிக்கும்
சமாதி என்ற இடம்.


காசு இருந்தால்
தினம் ஒரு திருவிழா
கொண்டாடி திண்டாடிய
வயோதிகமும் வாலிபமும்
விருப்பப்படாமல்
வீழ்ந்துக் கிடக்குமிடம்.


ஆசைப்பட்டு அடித்து பிடித்து
அடைந்ததை யெல்லாம்
அப்படியே விட்டுவிட்டு
அடியார்கள் அமைதி கொண்ட இடம்.


ஆக,
அத்தனைக்கும் ஆசைப்படு,
அளவோடு ஆசைப்படு,
விட்டுக்கொடு விருப்பமுடன்,
கொடுத்துப் பழகு,
கெடுத்து பழகாதே.


உயிர் சென்றவுடன்
சொர்க்கம் சேர எண்ணுவதைவிட
சொந்த இடம் போகுமுன்னே-பிணமே
சொர்க்கத்தில் வாழ்ந்துப் போ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!