வியாழன், நவம்பர் 28, 2013

ஹைக்கு                     

பாழடைந்த பங்களா

பயத்தோடு உள்ளே நுழைந்தது பேய்

மனிதன் இருப்பானோ ?.
.....................................................................பூமிக்கு

புயல் சொல்லிவிட்டுப்போனது

வேர்கள் வானம் பார்க்க ஆசைப்பட்டன.
.............................................................

தழைகள்

தலையசைத்து விடை கொடுத்தன

உதிரும் பூக்களுக்கு.
............................................................

எமனின் வாகனம் எருமையல்ல

சக்கர வாகனங்கள்

சாலை விபத்துக்கள்.
..............................................................

கிருத்தவம் சொல்லாத

மூவொரு கடவுள்

கரண்ட் கணினி காசு.
............................................

பக்கத்து வீட்டு

பாசங்களை பங்குபோட்டுக்கொண்டிருக்கிறது

இணையமும் தொலைக்காட்சிப்பெட்டியும்.
........................................................................கோவிலுக்குள் நுழைய

கடவுளுக்கும் ஆசைதான்
காசில்லை.அர்ச்சனை டிக்கட் வாங்க.
.........................................................................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!