வெள்ளி, அக்டோபர் 18, 2013

அம்மா...           மரங்கள்

பச்சை சேலை உடுத்தி
பகலவனை தடுத்து நிறுத்தி
பாசக் குழந்தைகளுக்கு
நேசமாய் நிழல் தரும்
நிஜத்தில் ஒரு தாய்.
வெட்டியவனுக்கும்
வியாபாரமாகவும்
வளர்த்தவனுக்கு
வள்ளலாகவும்
மேகம் தடுத்தணைத்து
மழை பொழியச்செய்யும்
மாய ஜாலக்காரி.


தென்றலுக்கு தலையாட்டி
புயலுக்கு பேயாடி
இளங்காற்றில் இலையசைத்து
காற்று உள்ளது என
காணச்செய்யும்
காற்றின் ஓர் கன உருவம்.


வியர்வையை
வெற்றியாக்கும்
வேலைக்காரர்களுக்கு
வெண் சாமரம் வீசும்
வெள்ளை மனசுக்காரி.


அடுத்தவன்
வயிற்றில் அடித்து
அன்றாடம் பிழைக்கும்
மனிதர்கள் மத்தியில்...ஊரார் உழைப்பை
உண்டு வாழும்
ஊனர்கள் மத்தியில்.....


சகாக்களையே
சார்ந்திருக்கும்
சந்ததியின் மத்தியில்...


தன் உணவை
தானே சமைத்துக்கொள்ளும்
தன்னம்பிக்கைக்காரி.உலகக்கழிவு கார்பன் காற்றை
உள்வாங்கி
உள்ளோர்கெல்லாம்
உன்னத
ஆக்சிஜன்
ஆக்கித்தரும்
அற்புத அம்மா இவள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!