அனுபவம் நல்ல ஆசான்.
பயத்தை வெல்லாதவன்
வாழ்வின் முதல் பாடத்தையே கல்லாதவன்.
வதந்தி ஆயிரம்
நாக்குடன் கூடிய இரும்பின் குரல்.
சிலர்
பிறரைப்பார்த்து கற்பர்,சிலர் ஏமாந்தபின் கற்பர்.
நேரத்தை சரியாக பயன்படுத்தாதவன்
எண்ணியதை ஒரு நாளும் அடைய முடியாது.
இன்முகத்துடன்
இருந்தாலே போதும் துன்பம் தானாய் பறந்துவிடும்.
சேராத இடத்தில்
சேர்ந்தால் வராத துன்பம் வரும்.
கருக்கல் பொழுதையும்
கல்யாண சோற்றையும் நம்பி ஏமாறக்கூடாது.
சிக்கனமும்
சேமிப்பும் வாழ்க்கையை உயர்த்தும் இரு கருவிகள்.
பிறரை சீர்திருத்தும்
கடமையை விட தன்னை முதலில் சீர்திருத்துவதே முதல் கடமை.
பணம் உண்மையான
செல்வம் அல்ல ஒழுக்கமே உண்மையான செல்வம்.
மிகப்பெரிய சாதனைகள்
சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல விடாமுயற்சியால் தான்.
தெரிந்தவற்றையெல்லாம்
பேசாதே. பேசுவதை தெரிந்துப் பேசு.
சோர்வில்லாத முயற்சி
கொண்டவர்க்கு செல்வம் தானே தேடி வரும்.
ஒரு மனிதனுக்கு உற்ற
நண்பர்கள் அவனது பத்து விரல்களே.
முதலையும்
மூர்க்கனும் பிடித்ததை விட மாட்டார்கள்.
தன் காலில் நிற்க எது
உதவுகிறதோ அதுதான் உண்மையான கல்வி.
அனைத்து வரிகளும் சிறப்பு. பயனுள்ளவை.
பதிலளிநீக்குபொன்மொழிகளின் அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு