சனி, டிசம்பர் 22, 2012

அரசியல் வாதி


தோளுயர தண்ணியிலே
ஆளொன்று நிற்கக் கண்டேன்
தலை மூழ்கி நீருக்குள்ளே-எதையோ
தேடுவதை கண்டுக்கொண்டேன்.

தோழா என்று கூப்பிட்டேன்
தலையெடுத்து கூர்ந்தான் என்னை.
தேடுவது யாதோ என்றேன்
தாமரை! தாமரை!! என்றுரைத்தான்.

விளையாட்டுக்கு ஒன்று சொன்னேன்.
விண்ணிலே தான் பூக்கும்!     
விழி பிதுங்கி தலை வானுயர்தினான் –தலை விதியே !
சிரிப்பால் நான் சிரம் தாழ்ந்தேன்.

தாமரை எங்கு பூக்கும்
தெரியாதா ? என்றேன் நான்.
தெரியாமலா ?
சொந்த கட்சிக்கு தலைவன்
நான் என்றான்.

"தேரிடும் நாடு- இவன்
நாட்டுக்கு வந்த வியாதி"
யாரோ சொல்லிப்போனார்கள்....
2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!