புதன், மார்ச் 28, 2012

வாருங்களே


வாருங்களே எழுந்து வாழ்த்துவோம் நாம்கூடி -2
வல்லப்பிதா மனுமகனாய் வருகிறார் முன்தேடி
           1
ஆறு லட்சணமுடைய ஆதிபரன் பாரீர் -2
ஆயர்கள் அடிபணிய அருள்புரிந்தார் நேரில்
           2
தந்தையாம் பதித்துரை சாமிக்கவி பாடி -2
சந்தோஷம் கொண்டாடிடுவோம் தற்பரனை நாடி
           3
வேதம் முனைந்த பெரியோர்களை கொண்டாட-2
வீணைத் தம்புரோடு வந்தோம் விமலனைக் கொண்டாட
           4
உலகின் பாவமொழிக்க ஓர் துணைவராக -2
உத்தா பெத்லேம் நகரில் உதித்தார் மகிழ்வாக
         5
பாருங்கள் ஆனந்தமாய் பாடியே நின்றாடி -2
பக்திசெய்வோம் இத்தரையில் யேசுவை மன்றாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!