புதன், மார்ச் 28, 2012

சுந்தர திருநாதா


சுந்தர திருநாதா ஓ சுந்தர திருநாதா
விருதானச் சுதா வந்தருள் தாதா
சுந்தர திருநாதா ஓ சுந்தர திருநாதா
              1
மங்கையாள் மாமரி ஈன்ற நற்புதல்வா
மாமலர் சூடியுன் பாதமே பணிந்தோம் (சுந்தர )

              2
ஆதம் வினைதனை நீக்க புவிதனில்
அற்புதமாய் வந்தவா
சோதனையால் மனம் ஏங்கி வந்தோமையா
சோர்வில் நின்றெமையே காத்திட நீ வருவாய் (சுந்தர )
              3
நாடு பல சுற்றி நல்லுபதேசங்கள்
நாளும் புரிந்தவனே
வீடுமே சேர்ந்திட நல்வழி காட்டினாய்
வீணருக்காயுடல் நொந்திட வந்தாய் (சுந்தர )
              4
அன்பும் பண்பும் நிறை தந்தை தாயும் நீயே
சொந்தமாக என்னையே
சோதனைத் தாங்கிட தூயனே வருவாய் (சுந்தர )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!