விடாது மழை பெய்துக்கொண்டிருந்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை.காடு மேடு எல்லாம் வழிந்து ஊர்முழுக்க தண்ணீர்...... தண்ணீர்.... ஊரில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர்...வழிந்து வீடுகளுக்குள் புகுந்த நேரம்.... அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேறி வெளியிடங்களில் தஞ்சம் புக ஆரம்பித்தனர். பக்கத்து வீட்டுக்காரர் கூப்பிட்டுப்பார்த்தார் அவர் மட்டும் வெளியேற மறுத்துவிட்டார். தண்டோரா போடப்பட்டு அரசாங்கமே அந்த ஊரைவிட்டு அனைவரையும் வெளியேற்றியது.அப்படி இருந்தும் அவர் வெளியேற மறுத்துவிட்டார் .என்னை கடவுள் காப்பாற்றுவார்.எனகூறிவிட்டார்.
மழை மேலும் நீடித்தது.வெள்ளம் வீட்டின் பாதியளவு வந்துவிட்டது. அவர்
வீட்டின் கூரையின் மேல் ஏறி அமர்ந்துக்கொண்டார். அவ்வழியாக சிறு படகு மூலம் வந்தவர்கள் இவரை கூப்பிட்டார்கள்.நீங்கள் போங்கள் கடவுள் என்னை காப்பாற்றுவார் ,என அங்கேயே உட்கார்ந்து இருந்தார்.ஹெலிகாப்ட்டர் மூலம் அரசாங்கம் மீட்பு பணிகளை மேற்கொண்டது.அவர் அப்பொழுதும் தன்னை காப்பாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.கடைசியில் அவர் நீரில் மூழ்கி இறந்துபோனார்.மேலோகம் சென்ற அவர் கடவுளிடம் கோபமாக கேட்டார் கடவுளே ஏன் என்னை காப்பாற்ற வரவில்லை. கடவுள் அமைதியாக சொன்னார், "பக்தனே பக்கத்து வீட்டுக்காரன், படகுக்காரன் ,மற்றும் ஹெலிகாப்டர் மூலம் உன்னை காப்பாற்ற வந்தது நான் தான் ,நீதான் அதை புரிந்துக்கொள்ளாமல் தவறு செய்துவிட்டாய். கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறீர்கள் ஆனால் மனிதனுள்ளும் இருப்பேன் என்பதை ஏன் உணர்வதில்லை" , உன் பக்தியை பாராட்டுகிறேன் இனி நீ என் அருகிலேயே இருக்கலாம் என்று ஆற்றுப்படுத்தினார்.
குறிப்பு : எங்கோ கேட்டவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!