சுறுசுறுப்பிற்கு பெயர் பெற்ற எறும்புகள் வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.ஓர் எறும்பு ஒரு மனிதனை கடிக்க அவன் ஓங்கி அடிக்க அதன் கால்கள் உடைந்தன .அது எறும்புகளின் அரசனிடம் முறையிட்டது. "அரசே இந்த மனிதர்கள் நம்மை அடித்து கைகால்களை உடைத்து விடுகிறார்கள் அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்" என்றது. "ஆமாம் நானே யோசித்துக்கொண்டிருக்கிறேன், நாளை அவசர மீட்டிங் ஒன்று கூட்டுவோம் இதற்கு தீர்வுகாணலாம்" என்று சமாதானம் சொல்லி அனுப்பியது. மறுநாள் எறும்புகள் எல்லாம் அரசனின் தலைமையில் ஒன்று கூடின.எறும்புகள் எல்லாம் மனிதர்களால் தாங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லித்தீர்த்தன.வயதில் மூத்த எறும்பு ஒரு ஆலோசனை சொல்லியது."நாம் கடவுளிடம் முறையிடுவோம்" என்றது. சரி நல்ல ஆலோசனை தான் அப்படியே செய்வோம் ,அடுத்து ஒரு வாலிப எறும்பு கூறியது, "நாம் கடித்தால் மனிதர்கள் சாக வேண்டும் என்ற வரம் கேட்போம் அப்பதான் மனிதர்கள் திருந்துவார்கள் நம்மை அடிக்க மாட்டார்கள் செத்துதொலைவார்கள்" என்றது. சரிசரி அப்படியே செய்யலாம் என்று முடிவு செய்து அனைத்து எறும்புகளும் கடுந்தவம்புரிந்தன.....
தவத்தினை கண்ணுற்ற கடவுள் நேரில் காட்சி தந்தார் ."எறும்புகளே என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்றார். கடவுளை கண்ட எறும்புகளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.அவசரத்தில் அந்த வாலிப எறும்பு கேட்டது. "கடவுளே நாங்கள் கடித்தால் சாகவேண்டும்" . நாங்கள் கடித்தால் மனிதர்கள் சாக வேண்டும் என்பதற்கு பதிலாக நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று கூறிவிட்டது. கடவுளும் உங்களுக்கு எப்படிப்பட்ட கெட்ட எண்ணம் நல்லவேலை நீ வாய் தவறியதும் ஒருவிதத்தில் நன்மைக்கே.. என்று எண்ணி கேட்டவரம் தந்துவிட்டுச்சென்றார். அதனால் தான் எறும்புகள் நம்மை கடிக்க நாம் அதனை அடிக்க அவை இறந்துவிடுகின்றன.
நீதி: அடுத்தவருக்கு தீங்கான வரம் கேட்டால் அது நமக்கே ஆபத்தாய் முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!