திங்கள், செப்டம்பர் 26, 2011

சென்னை கிராமத்தில் இருக்கும்

  நெடுங்கம்பட்டு  இனிய எங்கள் கிராமத்தில் திருமணங்களின்போது மைக்கில்  மொய் வாசிக்கும் பழக்கம் உண்டு.இந்த ஊரில் வசிக்கும் இன்னார் மகன் மணமகனுக்கு ரூபாய் 100.நெடுங்கம்பட்டு கிராமத்தில் வசிக்கும் குப்புசாமி மகன் அய்யாவு மணமகளுக்கு கால் பவுன் மோதிரம். இப்படி ஒலிபெருக்கி மூலம் அனைவரும் அறிந்துக்கொள்ளும்படி கூறுவார்கள்.இனிய திருமணம் ஒன்றில் அனைவரும் மகிழ்வுடன் கூடி காலை உணவு உண்டபின் மதியம் ஆகிற நேரம்... உறவினர்கள் அனைவரும் மணப்பந்தலுக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம் என்ற ஒலிப்பெருக்கியின் குரலைக்கேட்டு உற்றார் -உறவினர்கள் ஒன்று கூடினர். (காலை உணவிற்கு பின் மதிய உணவிற்கு முன் ஆண்களுக்கு என்ன வேலை......சந்தோஷத்தைக்கொண்டாட வேண்டி சரக்கு அடித்து ஜாலியாக இருப்பார்கள்.)அனைவரும் வந்திருந்து மணமக்களை ஆசிர்வதித்து அன்பளிப்புகள் அளித்து மகிழ்ந்துக்கொண்டிருந்த நேரம்.... சரக்கடித்த அண்ணார் ஒருவர் மைக்கில் அன்பளிப்புகள் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.நெடுங்கம்பட்டு கிராமத்தில் இருக்கும் அந்தோணி மகன் கண்ணு  மணமகனுக்கு ரூபாய்  501 அன்பளிப்பு....இப்படி கூறிக்கொண்டே வந்தவர் சென்னை கிராமத்தில் இருக்கும் இருதயம் மகன் சவரி என்று கூற.......... சம்பந்தப்பட்டசரக்கடித்த  நபர் எலேய் எங்க சென்னையை எப்படி நீ கிராமம் என்று கூறலாம் என சண்டைக்கு வர.... சரிசரிப்பா அவன் தண்ணிபோட்டிருக்கான் விடு .நீயே வாசிப்பா என மைக் அவரிடம் கொடுக்கப்பட்டது. இரண்டு மூன்று நபர்களை சரியாக வாசித்த அவர் வேலூர் கிராமத்தில் இருக்கும் எனஆரம்பிக்க முன்னவர்  இவன் மட்டும் என்ன யோக்கியமாவா சொல்றான் என மைக்கை பிடுங்க ......இருவரும் மைக்கிற்காக சண்டைபோட ...... மைக்கை வாடகைக்கு கொடுத்தவன் என் மைக்கை உடைச்சிடாதிங்க என அலறியடித்து ஓடிவர ......வாசித்த இருவரும் சேர்ந்து ஏய் உன்  மைக்கை என்ன முழுங்கியாபுட்டோம் என அவரிடம் சண்டைக்கு போக...... மைக்குகாரன் விட்டால் போதும் என தூரமாக ஓட.....ஒருவழியாய் வைபவங்கள் முடிவு பெற்றது.......


அன்றையிலிருந்து........ எங்காவது...திருமணநிகழ்ச்சிகள் நடைபெற்றால் நண்பர்கள் இதை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!