திங்கள், செப்டம்பர் 26, 2011

ஓ...பேய் கூட்டங்களே......

சில நினைவுகள் என்றும் மறப்பதில்லை !
நெடுங்கம்பட்டுகிராமம் ஓர் அழகியது.வல்லவர்களும் நல்லவர்களும் வாழ்ந்துச்சென்ற அமைதியான சிற்றூர். இயற்கையின் எழில்வளம் என்றும் உண்டு.திருக்கோவிலூரில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில்  திருவண்ணாமலை நோக்கிசெல்லும் வழியில் உள்ளது.பல நாள் இரவுகள் பகல்போல பறந்த காலங்கள் அவை.வாலிப வட்டங்கள் :                  படித்தவன்,படிக்காதவன்,குடித்தவன்,குடிக்காதவன்,வேலைக்குசெல்பவன்,செல்லாதவன்,
லவ்பண்றவன்,பண்ணாதவன் கோழிதிருட(டியவ)ன்*திருடாதவன்  அதை திண்ணவன்,திண்ணாதவன் இப்படி பலர் மாலை சுமார் 6மணிமுதல் ஒன்றுகூட ஆரம்பிக்கும் இடம் கண்ணாறு எனப்படும் சிறுபாலங்கள். அங்கு ஆரம்பிக்கும் அரட்டைகள் தொடரும்...
தெரு தெருவாகவும்...தொடரும்.....தொடரும்.....தொடர்ந்துக்கொண்டே இருக்கும் நடுநிசி வரை. அந்தச் சிரிப்புச்சத்தமும் பேசும் சத்தமும் தெருவில் யாரையும் தூங்கவே விடாது.அதை பொறுக்கமாட்டாமல் எவராவது,  ”ஏண்டா இப்படி கத்தரீங்க, பாடையில போவ ,ஒன்னுகூட எங்கியும் போய்தொலைய மாட்டேங்குது , சனியன்கள் தூங்கவிடுதுங்களா“  என்று இப்படி திட்டித்தீர்ப்பார்கள். அதற்கு ஒருவன் பதில் அளிப்பான்,”வேலைக்கா ? கல்லறைமோட்டிற்க்கா ? “  மீண்டும் தொடரும் அதிரடி சிரிப்புக்கள். இப்படி முடியும் இரவின் கடைசி அத்தியாயம், மச்சான் அந்த ஆளு நம்பளையே ”திட்டிட்டாண்டா என்ன பண்ணலாம்”,”கோழியை ஆட்டைபோட்டுவோம்” ஓகேடா.இரவு சபை கலையும் நேரம் யார் திட்டிவிட்டு தூங்கபோனார்களோ அவங்க வீட்டின் முன்னால் 12.00 மணியளவில் அனைவரும் கூடுவர், கூட்டத்தின் தலைவர்  
ஓ பேய் கூட்டங்களே ஒரு சத்தம்போடுங்க மக்கா அவ்வளவுதான் ”ஓவ் ” வென்று அனைவரும் அலர,அதில் பப்பாய் எழுப்பும் சத்தம் இருக்குதே(செய்துப்பாருங்கள்: கையை மூடி பின்புறம் திருப்பி வாயில் வைத்து: விட்டுவிட்டு ஊதவேண்டும்.....பப்பப்பவ் ) அதனாலதான் அவன்பேரு பப்பாய்
இந்த பேய் கூட்ட சத்தத்தில் அந்த தெருவில் உள்ள அனைவரும் எழுந்து எங்களை வாயார திட்டித்தீர்க்க.......நாங்கள் அனைவரும் ஓட்டமாய் ஓடி அவரவர்வீட்டில் பதுங்க...... இப்படியாக முடியும் ஒவ்வொரு இரவும்.
மறுநாள் யாராவது நல்லவர்கள் எங்களை கூப்பிட்டு அறிவுரை
 கூறுவார்கள்( ? )=(திட்டித்தீர்ப்பார்கள்)..   .......அன்று இரவு........அவங்க வீட்டின் முன்னால்  ”ஓ...பேய் கூட்டங்களே.”.....,,,,.....,,,,,....,,,,,......../


பின் குறிப்பு : அவசியம்  கோழித்திருடன்  பற்றி அறிந்துக்கொள்ளுங்கள் .


5 கருத்துகள்:

  1. கோழித்திருடன் பின்னால் கூப்பிடும் தூரத்தில் நின்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது. தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரம் மூலமாக அறிமுகமானதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!