புதன், மே 13, 2020

கொரோனா….வாழ்த்துக்கள்.

கொரோனாவை  கட்டுப்படுத்த உதவிய அனைத்து துறை மற்றும் பொது மக்கள் அன்பர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.அதிலும் காவல்துறை
டோரன்களை பறக்க விட்டு பலரை தெரிக்க தெரிக்க  ஓட விட்டு மேலும் ஜல்லிக்கட்டு கமெண்டரி சேர்த்து  துன்ப செய்திகளுக்கு நடுவில் சிறு சிரிப்பு மலர்ந்தது அனைவருக்கும். டோரன் வீடியோ ரசிகர்களாய் பலரை மாற்றியது உண்மை. என்னையும் சேர்த்து.

வெற்றிகரமாக லாக்டவுன் ஏறக்குறைய தடைகள் எல்லாம் நீக்கி விட்ட பின் வழக்கம்போல மக்கள் கூட்டத்தினை காணும்பொழுது ஒருபுறம் சந்தோஷம் ஒருபுறம் பயம்.

கொரோனாவை கூட தாங்கிக்கொள்ளலாம் பொருளாதார வகையில் தாங்க இயலாது என்பதாக கருதி தடைகள் எல்லாம் நீக்கம்.

நல்லது.

4ம் கட்ட ஊரடங்கில் என்ன சொல்ல போறாங்களோ தெரியல….!

இனி நமக்கு நாமே பாதுகாப்பு திட்டம் போட்டுக்கொள்ள வேண்டியது தான் வேற வழி இல்லை.

அதில் ஒரு சின்ன பாதுகாப்பு டிப்ஸ்.

எல்லோரும் எதை எதையோ வாங்கும் ஆர்வத்தில் குவிந்துக்கொண்டிருக்கிறோம். கொரோனாவையும் வாங்கி விடுவோமா ? என்ற பயம் இல்லாமல் பலர். பயத்துடன் சிலர்.

கொரோனா  காசு பணத்தின் மூலமும் பரவும் என்பது கொடுமை.

அனைத்தையும் தாங்கி நோய்தடுப்பு வழி வகைச்செய்யும் அரசாங்கம், தங்கள் உயிரையும் துச்சமென கருதி களப்பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள்  சுகாதார பணியாளர்கள் அடங்க மறு பிரியர்களையும் மதுப்பிரியர்களையும் அடக்க அவஸ்த்தைப்பட்டு அடக்கிய காவல்துறை அனைவருக்கும் விரைவில் எல்லாம் சுபம் காண நல்வாழ்த்துக்கள்.

சொல்ல வந்ததே வேற….
ஆக டிப்ஸ் இது தான்….

கடை வீதிகளுக்கு செல்லும்பொழுது அரசாங்க ஆணையின்படி வழக்கமான முகக்கவசத்துடன் முடிந்த அளவு அதிக சில்லறையுடன்  செல்லுங்கள். பொருட்களுக்கான தொகையை செலுத்தும் பொழுது மிகச்சரியாகக்கொடுத்து விடுங்கள்.  கடைகாரரிடமிருந்து மீதம் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பணத்தின் மூலம் பரவும் கொரோனாவை நமக்கு வராமல் நாம் தவிர்த்து விடலாம்.

ஏன்னா சில்லறையில் காத்திருக்கும் கொரோனா கூட நம்மை கடித்து விடலாம்.


அனைவரும் நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்





1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!