செவ்வாய், நவம்பர் 25, 2014

வாட்ஸ் அப் வாய்ஸ்“ ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம் னு பேனர் அடிச்சதுக்கு இறந்தவரோட மனைவி ஏன் கோபிச்சுக்கிறாங்க? “

“அந்த பாழாபோன சாந்தியை  தேடிப்போனதால தான் அவரு மண்டையையே போட்டாரு. அதையேண்டா திரும்ப ஞாபகப்படுத்துறீங்கனு திட்டறாங்க” 

***********************************************************
" சார்
பரோட்டா மாஸ்டர்னா பரோட்டா போடுவார்
டீ மாஸ்டர்னா டீ போடுவார்
மேக்ஸ் மாஸ்டர்னா மேக்ஸ் போடுவார்
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டையை  போடமாட்றீங்க ?"  

ஹெட்மாஸ்டர்: ???
*************************************************************

டாக்டர் :- " உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு " 

பேஷண்ட்:- " என் கிட்னியை நான் படிக்க வைக்கவே இல்லையே டாக்டர் அப்புறம் எப்படி பெயில் ஆகும்? "
***********************************************************

வக்கீல்:- உனக்கு திருமணம் ஆகிவிட்டதா?

சர்தார்:- ஆகிவிட்டது

"யாருடன்"

"ஒரு பெண்ணுடன்"

"பின்ன, பெண்ணை திருமணம் செய்யாம ஆணை யா திருமணம் செஞ்சுக்குக்குவாங்க "

"செய்றாங்களே, என் தங்கச்சி ஒரு ஆணை திருமணம் செய்துக்கொண்டிருக்கிறாள்"

****************************************************************************************

" உங்களுக்கு பிபி சுகர் எல்லாம் இருக்கு ஆடு கோழி மீன் சாப்பிடுறதை எல்லாம் நிறுத்தனும் "

" அதுங்க சாப்பிடுறதை நான் எப்படிங்க டாக்டர் நிறுத்த முடியும் "

******************************************************************************************
மேலே உள்ளவை வாட்ஸ் அப் ல நம்ம 'குரு'ப்போட வெந்ததும் வேகாததும். ச்சீ வந்ததும் விட்டதும்.

 நாம 'வச்சி' இருக்கிறதை எப்படி எல்லாம் நிருபிக்க வேண்டி இருக்கு.
 .
.
.
.
.
.
.
.
.
அட 'இண்டர்நெட்' கணெக்க்ஷனைச்சொன்னேன்.

11 கருத்துகள்:

 1. நீங்க வச்சு கிட்டு இருப்பதை ஊர் உலகம் தெரிஞ்சுக்க வேண்டாமா ?தமிழ் மணத்தில் இணைத்து ,வாழ்த்தி வாக்கும் போட்டுவிட்டேன் :)

  பதிலளிநீக்கு
 2. கடி தாங்க முடியலை சாமி
  இருந்தாலும் மாணவன், ஹெட்மாஸ்டர் ஜோக் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அப்ப பாஸ் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்.தங்களின் வருகை பெருமை. மிக்க நன்றிகள் அய்யா

   நீக்கு
 4. கடி ஜோக்ஸ் அனைத்தும் நன்றாகவே கடித்தன..ஹஹஹ ரசித்தோம்...

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!