செவ்வாய், அக்டோபர் 28, 2014

பால் விலையும் பாமரனும் .



ரெஃப்ரி:-  “ யோவ் எங்கய்யா.. ‘டாஸ்’ ல ஜெயிச்ச கேப்டனையும், தோத்த கேப்டனையும் ரொம்ப நேரமா ஆளைக்காணோம் ? “



வீரர்கள் :- “ ஜெயிச்சவர் சந்தோஷத்துலயும் தோத்தவர் துக்கத்துலயும் ‘டாஸ்மாக்’ போயிட்டாங்க சார் “ 


ரெஃப்ரி:- “  ??? “
...................................................................................................................................................

பால்விலையும் பாமரனும் .

“அடிபட்ட
என் ஆத்தா.
உனக்கு
ஆவின் பால்
ஊத்தலாமுனு
ஆசையா தான் இருக்கு.
கூட கொஞ்சம் காசு போட்டா
குவாட்டரே
அடிக்கலாம் போல “

..........................................................................................................................................

இப்படி ஒரு சோதனையா ? ஒரே ரோதனையாப்போச்சு.


என்
காலைக்கடித்த
செருப்பை
நாய் கடித்துவிட்டது.
நான் யார் மேல் கோபப்பட.
என்னை கடித்த செருப்பு மீதா ?
செருப்பை கடித்த நாய் மீதா ?
......................................................................................................
அடக்கடவுளே.!


புரிதல் ஒரு கலை
கடவுள் பக்தனையும்
பக்தன் கடவுளையும்.
யாரால் யாருக்கு?
தேடிய விடை
வினாவாகவே நின்றுப்போனது.
நீயும் நானும்
இன்னும் புரிந்துக்கொள்ளவில்லையே
கடவுளே !.


5 கருத்துகள்:

  1. மனிதன் கடவுளை சோதிக்கிறானா.கடவுள் மனிதனை சோதிக்கிறானா என்ற புரிதலும் இல்லைதான் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. பால் விலையும் பாமரனும்! நகைத்தேன்!

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. டாஸ்மாக் ஹஹஹஹ...

    பாமரனும் பால் விலையும் ஆஹா...ரசித்தோம்..

    மற்றவையும் அருமை....மிகவும்!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!