வணக்கம் ( பாடல்
)
இதோ பாரு ஒன்னு
ஒருத்தரைப்பார்த்து
நின்னு
வணக்கம் சொல்லு
கண்ணு.
இதோ பாரு ரெண்டு
ரெண்டு பேரைப்பார்த்து
ரெண்டு வணக்கம் சொல்லு.
இதோ பாரு மூணு
மூணு பேரைப்பார்த்து
மூணு வணக்கம்
சொல்லு.
இதோ பாரு நாலு
நாலு
பேரைப்பார்த்து
நாலு வணக்கம் சொல்லு.
இப்படியாக 10 வரை
சொல்லிக்கொண்டே போக வேண்டும். ஒவ்வொரு முறையும் அத்தனை நபர்களுக்கு வணக்கம் சொல்ல
வேண்டும்.உதாரணமாக நாலு பேர் என்றால்
நான்கு நபர்களுக்கு வணக்கம் சொல்லிய பின் ஐந்து என்ற எண்ணை பாட வேண்டும். இந்த
செய்கையுடன் கூடிய பாடல், விளையாட்டுடன் சேர்ந்து எண்களை அறிவதுடன் அடுத்தவர்களுக்கு
வணக்கம் சொல்ல வேண்டும் என்ற நற்பண்பையும் அறிந்துக்கொள்கிறார்கள். மிக ஜாலியாக
செய்கிறார்கள் மாணவர்கள்.
யார்? (பாடல்)
ஆத்திச்சூடி
எழுதியது யாரு?
ஔவையார் என்று
தானே பேரு.
பாப்பா பாடல் எழுதியது
யாரு?
பாரதியார் என்று
தானே பேரு.
திருக்குறளை
எழுதியது யாரு?
திருவள்ளுவர்
என்று தானே பேரு.
இப்படி
உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
யார் யார் எந்த
எந்த நூல்களை எழுதினார்கள் என்பதை பாட்டின் வாயிலாக கற்பிக்கலாம்.
மாணவர்களை இரண்டு
குழுக்களாகப்பிரித்து ஒரு குழு கேள்விகள் கேட்க, மற்ற குழுவினர் பதில் சொல்ல.....
வகுப்பறை கலகலப்பாகச்செல்லும்.
இப்படியாக எளிய
பாடல்கள் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டை எளிதாக்கலாம். குழந்தை பாடல்கள் மிக
எளிதாக.....நீளமாக இல்லாமல். வந்த வார்த்தைகளே மீண்டும் வருமாறு அமைத்தால் உடனே புரிந்துக்கொள்வார்கள். தோழமைகளே !
இப்படியான பாடல்களை கமெண்டில் அளியுங்களேன் ... பள்ளி சிறார்களுக்காக.
இங்கும் ஔவையாரா ..?
பதிலளிநீக்குஇப்படி சொல்லிக் கொடுத்ததாரு,
பதிலளிநீக்குகிங்க்ராஜ் என்பதுதானே அவர் பேரு !
த ம 1
அட!,அருமை. இதனை நாங்கள் எங்கள் தமிழ் பள்ளியில் நடைமுறைப்படுத்தி பார்க்கிறோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கிங் சார்.
அய்யா.. இது ரெம்ப கொடுமையாச்சே...100ன்னு சொன்னா நூறு தடவை வணக்கம் சொல்லனுமா.....
பதிலளிநீக்குநல்ல பாடல்! ம்ம்ம்ம்ம்வலிப்போக்கன் சொன்னதும் யோசிக்க வைக்கிறது நண்பரே! மாற்று இருக்கானு பாருங்க நண்பரே! ஏன் என்றால் நல்லாருக்கு யோசனை!
பதிலளிநீக்குநண்பரே! வலைச்சரம் பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க!!!!
பதிலளிநீக்கு