செவ்வாய், செப்டம்பர் 30, 2014

இன்றைய உண்ணாவிரதம் சுமார் தான். ஏன்?“ இன்னைக்கு உண்ணாவிரதம் சுமார் தான் “

“ ஏங்க கூட்டமே இல்லையா? “ 


“அட மதியம் உண்ணாவிரதத்துக்குப்போட்ட  பிரியாணியில லெக் பீசே இல்ல அதைச்சொன்னேன் “
......................................................................................................................................

தலைவர்:- “ உண்ணாவிரதத்தை ஏன் அடுத்த தெருவுக்கு மாத்தச்சொல்லி கேட்கிறாங்க?”

தொண்டர்:- “ ஓட்டல், டாஸ்மாக் இங்க இருந்து ரொம்ப தூரமாம்... அதான் கொஞ்சம் கிட்ட இருக்கிற மாதிரி அடுத்த தெருவுக்கு மாத்தச்சொல்லி கேக்கிறாங்க “
..............................................................................................................................................

“ என்னது உண்ணாவிரதத்துல கலந்துகிறதுல ரொம்ப ஆர்வமா இருக்க?”

“ அட மதியம் வயிறு முட்ட சாப்பாடு கிடைக்குமே அதான் “
..............................................................................................................................................

செய்தி:-

பெட்ரோல் விலை 65காசுகள் குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 65காசுகள் குறைக்கப்படுகிறது. மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலை 15 மற்றும் 30ம் தேதி மறு ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. . .அட கேட்டுட்டு நாம சும்மா இருக்கமுடியுமா ஏதாவது சிண்டு முடியா வேண்டாமா?

“இந்த எண்ணை வியாபாரக்காரர்கள் விலை குறைப்பின் மூலம் அம்மாவுக்கு எதிராக சந்தோஷம் கொண்டாடுகிறார்கள்.” 

“ அட நீங்க ஒண்ணு அதிமுக பிரமுகர்கள்அடிக்கடி பெங்களூரூ சென்று வர வேண்டாமா  பாவம் எவ்வளவு செலவு....அதாங்க நல்ல மனசு பண்ணி விலை குறைச்சி இருக்காங்க “
..........................................................................................................

10 கருத்துகள்:

 1. சமயத்துக்கு தகுந்த மாதிரி காமெடி கொடுக்குறீங்களே நண்பா,,,,

  பதிலளிநீக்கு
 2. சமய சார்பற்ற நமக்கே இந்த கதினா பார்த்துட்டு சும்மாவாங்க இருக்க முடியும்.?

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் அருமை ரசித்தேன்.
  அதிலும் கடைசி ஜோக் - நன்றாக சிந்து முடிவீர்கள் போல இருக்கே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லனா இந்த உலகத்துல குப்பை கொட்டமுடியாதுங்க அய்யா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!