புதன், ஆகஸ்ட் 27, 2014

இதுக்கு கூடவா வெட்கப்படுவாங்க?...
 ஆசிரியர்:- “ நீ எழுந்திரு, ‘பார்ட்ஸ் ஆப் த பாடீ’ சொல்லு “
 
குட்டி சர்தார்ஜி:- “ போங்க சார், எனக்கு வெக்கமா இருக்கு “


(அட,இதுக்கு கூடவா வெட்கப்படுவாங்க?...)

.......................................................................................................................................
ஆசிரியர்:- “ரைட், பாடம் நடத்தி முடிச்சாச்சு. இப்ப சந்தேகம் கேக்கறவங்க கேக்கலாம்”

குட்டி சர்தார்ஜி:- “ இண்டர்வெல் பெல் அடிக்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சார் ”

(சபாஷ் சரியான கேள்வி)
.......................................................................................................................................
ஆசிரியர்:- “ நீ ஏன்டா எப்பப்பாரு இந்த கடன் வாங்கி கழித்தல் கணக்கை மட்டும் தப்பு தப்பா போடுற “


குட்டி சர்தார்ஜி:- “ வாழ்க்கையில எந்த சூழ்நிலையிலயும் கடன் வாங்கக்கூடாதுனு எங்க அப்பா சொல்லி இருக்கார் சார் “

(அட! நல்ல கொள்கையா இல்ல இருக்கு)
.....................................................................................................................................
ஆசிரியர் :-  மனுநீதிசோழன் மிகசிறந்த அரசன்..... நீதி தவறாதவன்...”

குட்டி சர்தார்ஜி:- “இன்னைக்கு இலஞ்சம் நிறைய வாங்கி ஒரு மனுநீதி அந்த ராஜா மானத்தையே வாங்கிட்டானே சார்”

(நல்லப்பெயரை நாம் வைத்துக்கொண்டு அவங்க மானத்தை இப்படிக்கூட வாங்கலாமோ?)
...........................................................................................................................

5 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!