செவ்வாய், ஏப்ரல் 15, 2014

ஒன்றாம்வகுப்பு VIP


நீண்ட நாட்களுக்குப்பிறகு எனக்கு முதல்வகுப்பில் கற்பித்தஆசிரியரை சந்தித்தேன். 1979 ல்  கல்விப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆலமரத்தின் நிழலின் கீழ்தான். அப்பாடா இன்னும் இளமையாகத்தார் இருக்கிறார்.....திரு குழந்தைராஜ் தலைமை ஆசிரியர் ஓய்வு அவர்கள். “என்ன சாமி எப்படி இருக்குற?  என்று அவர் கேட்டபொழுது எனக்கு எப்படியோ இருந்தது..கொஞ்ச நேரம் பேசியப் பின்னர் கிளம்பிச்சென்றார்..சொல்லத்தெரியவில்லை மன உணர்ச்சியை.


ஆரம்பக்கல்வியும் அழியாநினைவுகளும் :-
       யிரம் பட்டங்கள் பெற்றாலும் நமது ஆரம்பக்கல்வியை நினைக்கும்பொழுது எல்லோருக்கும் சற்று வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் எனது ஆரம்பக்கல்வியை நினைக்கும்பொழுது சில ஞாபகத்திற்கு வந்த நினைவுகள்.

கன்னாற்றுக்குட்டை:
சிறுபாலங்களை கன்னாறு என்று அழைப்பது எங்கள் பகுதி மக்களின் வழக்கம்.
நாங்கள் பள்ளிக்கு கிளம்பிச்செல்வோம் சும்மா நாலுபேரு நச்சுனு. இன்டர்வெல் பெல் எப்படா அடிக்கும் என பார்த்துக்கொண்டிருப்போம். யாருக்கும் தெரியாமல் மஞ்சள் பையை (ஒரு மண் சிலேட்..... வாய்ப்பாடு முக்கால் பாகம் கிழிந்து...பாதி....மீதி புத்தகங்கள்.கைக்கே எட்டாத அளவுள்ள பல்பங்கள், கோலிகுண்டுகள் நிறைய... கிட்டிப்புல்..இதுதான் எங்கள் பேக். ஆனா இப்பப்பாருங்க பெரியவங்களாலேயே தூக்க முடியாத அளவு வெயிட்.) எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவோம் வெளியே.எங்கே? அந்தசிறுபாலத்தின் அடியில் தான் மற்றவகுப்பு நேரங்கள் முழுவதும் ஆட்டம் போடுவோம்.பள்ளிக்கு அருகிலேயே  இருக்கும். மதியம் உணவு இடைவேளை மணி ஒளித்ததும் மதிய சத்துணவு வாங்க பள்ளிக்கு சென்றுவிடுவோம். சாப்பிட்டுமுடித்தபின் மீண்டும் மதிய வகுப்புகள் பாலத்தின் அடியில் தான் எங்களுக்கு.
இப்படியாக நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைகண்ட சக தோழர்கள் ஆசிரியரிடம் மாட்டிவிட..
வகுப்பறையில் எங்களை காணவில்லை என்றால் உடனே பிள்ளைகளை அனுப்பி இழுத்துக்கொண்டுவர அனுப்புவார் . மாணவர்கள் ஒருபுறம் நுழைந்தால் நாங்கள் மறுபுறம் தப்பித்துச்செல்வோம்.இப்படியாக போயிக்கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியரே வந்து இரண்டுபுறமும் மாணவர்கள் சூழ்ந்துக்கொள்ள ஒருநாள் வகையாக மாட்டிக்கொண்டோம்.அடிஉதையுடன் அள்ளிக்கொண்டுச்சென்றார்கள் வகுப்பறைக்கு.

அவசரமாக எங்கள் செயற்குழு கூடியது....

மூக்குசளி மரம்:-
கேள்விபட்டதுண்டா நீங்கள்?. இந்தமரத்தின் பழங்களை எடுத்து பிய்த்துப்பார்த்தால் சளி போன்று திரவ நிலையில் நீர் வரும். அதனால் எங்கள் பகுதியில் இம்மரத்தின் பெயர் மூக்குசளி மரம்.
செயற்குழுவில் மிகமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
      னிமேல் பாலத்திற்கு செல்லக்கூடாது நாம் செல்லும் இடம் மூக்குசளிமரம். இது புதர்கள் நிறைந்த அடர் மரங்களுக்கும் செடிகளுக்கும் நடுவே அமைந்து இருந்தது  எளிதில் கண்டறியப்படாத புதுஇடமாக இருந்தது. நாங்கள் கண்டறிந்து எங்கள் வசிப்பிடமாக மற்றிக்கொண்டோம்... மீண்டும் தேடினால் நாங்க எங்க பாலத்திற்கு அடியில் இருப்போம்?..... வெகு நாட்களுக்குப்பிறகு இந்த இடத்தையும் கண்டுபிடித்து விட்டார்கள் என்ன செய்வது எல்லாம் இந்த ஒன்றாம் வகுப்பு விஐபி செய்த வேலை.

அணில் பிடித்த கதை.
ருநாள் மரத்தடியில் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆலமரத்தின் கீழ் அட்டகாசமான நிழல். மரத்தின் மேலே சண்டையிட்டுக்கொண்ட அணில்கள் தொப்பென்று கீழே விழுந்தது. அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சும்மா இருக்க முடியுமா? பையில் உள்ளதை கீழே கொட்டிவிட்டு ஓடிச்சென்று புடிச்சாச்சுயில்ல..... அனைவரும் கொஞ்சி மகிழ்ந்து ஓடிப்போ என விட்டுவிட்டோம்...ஆசிரியரும் சிரித்துக்கொண்டே....என்னா வேகம்....  திட்டாமல் விட்டது இன்னும் சந்தோஷம்.

எழுத்துக்கள், எண்களை தரையில் எழுதிவிட்டு அதன்மீது  சிறுகற்கள் புளியன் கொட்டைகள்....அடுக்கச்செய்வார்கள்.இரும்புக்குடத்தில் வகுப்பறையின் ஒருமூலையில் எப்பொழுதும் கற்கள் இருந்துக்கொண்டே இருக்கும். மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலப்பாடம் ஆரம்பம். அப்ப தான் ஏ பி சி டி யே கற்பிப்பார்கள். ஆனால் இந்த காலத்தில்??????....
இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு தற்பொழுது இப்படியான விளையாட்டுமுறைக்கல்வி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அக்காலத்திலேயே இப்படி போதித்தவர்களில் எனது விஐபி யும் ஒருவர்.
ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூ பூத்ததாம்
ரெண்டு குடம் தண்ணீர் ஊற்றி ரெண்டே பூ பூத்ததாம்
இப்படி எண்களை பத்து வரை பாடிக்கொண்டே போக வேண்டும். இந்தப்பாட்டு இன்றும் ஆரம்பக்கல்வி நிலையங்களில் பாடப்படுகின்றன.

 சுமார் ஒன்னறைகிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளி
அங்கும் இந்த ஏமாற்றுவேலை தொடர்ந்தது
தினமும் கடைசி பாடவேளை விளையாட்டிற்காய் ஒதுக்கி இருந்தார்கள்.கிளம்பிவிடுவோம் வீட்டிற்கு. ஆனால் பாதிவழியில் வந்துக்கொண்டிருக்கும் பொழுது மிதிவண்டியில் வேகமாக வந்து மடக்கி மீண்டும் ஓட்டிக்கொண்டுச்செல்வார் புதிதாக பணியேற்ற ஆசிரியர். நீங்க புதுசு சார் நாங்க எத்தனை ஆசிரியர்களைப்பார்த்து இருப்போம்?. ரோட்டிலே போனாதானே புடிக்க முடியும்... வயல்காட்டு வழியாக இறங்கி நடந்து செல்வோம்...பாவம்..ஆசிரியர்... தற்போது அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றும் திரு சவரிமுத்து ஆசிரியர் அவர்கள்... அவரிடம் இப்பொழுதும் சொல்லிச்சொல்லி சிரிப்போம்...

கிறிஸ்தவ மாணவர்களுக்கான மறைக்கல்வித்தேர்வு மிக முக்கியமான ஒன்று. பாண்டி கடலூர் மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து கிறித்தவ பள்ளிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் 5,6.7 ஆகிய வகுப்புகளில் அனைத்தும் முதல் இடங்களில் பரிசுபெற்று வந்தேன்....எப்படித்தான் ஏமாற்றினாலும் இந்த ஒரு காரணத்திற்காக கொஞ்சம் அடி உதையில் ஆசிரியர்களிடம் சலுகை கிடைத்து வந்தது. அதற்கு ஆப்பு வைத்தார் அருமை நண்பர் திரு பவுல்ராஜ், 8ஆம் வகுப்பில் புதிதாக எங்கள் பள்ளியில் இணைந்து முதல் பரிசை தட்டிக்கொண்டுப்போனார் இப்படிச்சொல்லிகொண்டே போகலாம் பாவம் நீங்கள்.
அதனால் .-
                          -முற்றும்-
பேஸ்மட்டம் எல்லாம் கொஞ்சம் ஸ்ட்ராங்கா தான் இருந்துச்சு
ஆனா பில்டிங்கு தான் கொஞ்சம் வீக்காகிப்போச்சு.
 இப்படியாக படிப்படியாக குறைந்து மக்காகி....
இப்பொழுது உங்கள் முன்......

நீங்களும் கொஞ்சம் அசைப்போட்டுப்பாருங்களேன் என்னைப்போலவே புன்முறுவல் பூக்கும் உங்கள் பூ முகமும்.


10 கருத்துகள்:

  1. இனிய பள்ளிக்கூட ஞாபகங்கள் நினைவுக்கு வந்தன....

    பதிலளிநீக்கு
  2. ஆனா இப்பப்பாருங்க பெரியவங்களாலேயே தூக்க முடியாத அளவு வெயிட்.)
    உண்மைதான் பிள்ளைகளின் புத்தகச்சுமைகளை பெற்றவர்களால் தூக்கமுடிவதில்லை..

    வெளியூர் செல்லும் போது கனமான பெட்டிகளை அநாயசமாக சுமக்க இந்தப் பழக்கம்தான் கைகொடுக்கிறதோ என வியக்கவைக்கிறது...

    மலரும் நினைகள் அருமை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றிகள் பல.

      நீக்கு
  3. என்னையும் சிறுது நேரம் அசைபோடவைத்து
    மகிழ்வித்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வாக்களிப்பிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  5. #இப்படியாக படிப்படியாக குறைந்து மக்காகி....
    இப்பொழுது உங்கள் முன்......#
    மக்காகி ,மக்கி உரமாகி ,உரத்திலே விளைந்த வலைத்தளப் பூவாய் மலர்ந்து விட்டீர்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதால்தானே படைப்பாற்றல் சாத்தியம் ஆகிறது ?
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகமிக நன்றிகள் ஜி. வாழ்த்துரைக்கும் வாக்களிப்பிற்கும்.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!