புதன், ஏப்ரல் 09, 2014

வேட்பாளர்கள் தேவை


“ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் அப்படினு மற்ற கட்சிகளைப்போல பொய் சொல்லமாட்டோம் “

“ஆமா எதையுமே செய்யமாட்டோம்னு சொல்லாம சொல்றீங்களோ? “................................................................................................................................................

“இருந்தாலும் அந்த கட்சியின் நிலைமை இவ்வளவு மோசமா இருக்க கூடாது “

“ஏன் ?

 “வேட்பாளரா நிற்க ஆட்கள் தேவை அப்படினு டிவி யில விளம்பரம் கொடுக்கிறார்களே “

..........................................................................................................................................................

‘என்னங்க நம்ம ஆள ஒரே அடியா கட்சியைவிட்டு தூக்கிட்டாங்க

“ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாரேன் மறப்போம் மன்னிப்போம் னு மீண்டும் பதவி கொடுப்பாங்க

(நான் கலைஞரையும், மு.க. அழகிரியையும் சொல்லலீங்க)
....................................................................................................................................................

   


நாற்காலி-

அரசியல்வாதிகளும்
அன்றாடம் காய்ச்சிகளும்
அரசன் முதல் ஆண்டிவரை
அதிகம் ஆசைப்படும் அதிசயப்பொருள்

பதவி நாற்காலி.

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!