வியாழன், மார்ச் 27, 2014

வசூலில் சாதனை“ரொம்ப கஷ்டப்பட்டு இந்த ஜோக்கெல்லாம் எழுதினேனுங்க, சிரிக்கவே மாட்டேனு கம்முனு இருக்கிறீங்க”

“சிரிக்கிறதுக்கும்  கஷ்டமாதான் இருக்கு நான் மட்டும் என்னங்கபண்ணட்டும்”

(பாவம் பா அந்த எழுத்தாளர் சும்மானாச்சும் சிரிச்சு வையுங்க)


...................................................***......................................................................................
 
“இரும்புக்கடை வியாபாரியை தேர்தல்நிதி குழு தலைவரா போட்டது ரொம்ப தப்பாப்போச்சு”

“ஏன்?”

“நிதியை வசூல் பண்ணிக்கிட்டு கம்பியை நீட்டிட்டார்”

(அட அதுதான்  அவரது தொழிலாச்சே)
...............................................**********...........................................
“ஆம் ஆத்மீக்கு எதிர்கட்சி எது?”

“இல்லை ஆத்மீ சார் ”

..................................*************************...........................................................

“அந்த ஸ்வீட்கடை முதலாளி அவங்க குடும்ப கல்யாணத்தை மிகச்சிறப்பா நடத்தி முடிச்சார்”

“அப்ப ஜாம் ஜாம் னு நடத்தி முடிச்சிட்டார்னு சொல்லுங்க “

............................................**********************...........................................................

“நாளைக்குத்தான் புதுப்படம் ரிலீஸ் னு சொன்னாங்க அதுக்குள்ள ‘வசூலில் சாதனை’ அப்படினு போஸ்டர் ஒட்டறாங்க”

“அட படத்தோடப் பெயரே அதுதானாம்........வசூலில் சாதனை “

(படம் வசூல் பண்ணுதோ  இல்லையோ பெயரிலாவது இருந்துட்டு போகட்டுமே )4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!