வெள்ளி, ஜனவரி 17, 2014

நானும் புத்தகம் போடப்போறேன்.

"அட என்னங்க சார் இப்படி பண்ணீட்டீங்க ?"
 
"என்னப்பா ?"

"நானும் புத்தகம் போடப்போறேனு சொல்லிட்டு  கையில இருந்த புத்தகத்தை மேசை மேல போட்டா எப்படீங்க......?"
.......................................................


நீதிபதி : "உனக்கு 6 ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கிறேன்"

குற்றவாளி :    "தண்டனையில  பொங்கல் தள்ளுபடி ஏதாவது 
                                     உண்டுங்களா ஐயா?"
................................................................
 


"நீங்கள் எல்லோரும் விழிப்புடனும் முழிப்புடனும் வேலை பார்க்கணும். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் சின்ன சத்தம் வராம கச்சிதமா முடிக்கணும்  ...."

"என்னய்யாஏட்டு............ பக்கத்துல ஏதாவது தொழிலாளர்கள் மீட்டிங் நடக்குதா வசனம் எல்லாம் அட்டகாசமா பேசறாங்க?"

"அட நீங்க ஒன்னு சார் .....அங்க  பாருங்க......... ஜெயில் உள்ள இருக்கிற கபாலி  கூட இருக்கிற கைதிகளுக்கு தொழில சொல்லிகொடுத்துனு இருக்கான்"
.......................................................................

"என்னது தலைவர் ரொம்ப சோகத்துல இருக்கார்"


"அட எந்த கட்சிகூட கூட்டணி வைக்கலாம்னு முடிவு பண்ணமுடியாம கடைசியில சீட்டு குலுக்கி போடலாம்னு முடிவு பண்ணி சீட்டு குலுக்கிபோட்டாங்களாம்"


"அப்புறம் என்ன.... எந்த கட்சி சீட் வந்திச்சாம் ?"

"நீ ஒன்னுப்பா ஃபேன் காத்துல எல்லா சீட்டும் பறந்து ஓடிடுச்சாம்.....சகுனம் சரியில்லனு எல்லாரும் கிளம்பி போயிட்டாங்களாம் அதான் சோகமா இருக்கார்"
............................................................
book animated photo: reading book 33.gif


மைன்ட் வாய்ஸ்  விழுந்து விழுந்து படிச்சாலும் சிரிப்பு மட்டும்   வரமாடேங்குது...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!