செவ்வாய், ஜனவரி 14, 2014

பொங்கலோ பொங்கல்



புதுப்பானை கோலமிட்டு சிங்காரித்து அதில்
பூமஞ்சள் சந்தன குங்கும பொட்டுமிட்டு
சுந்தர சூரியரை தாழ்ந் தோங்கி
சங்கேமுழங்கு நன்றே முழங்கு பொங்கலோ பொங்கல்”.

செங்கரும்பு செழுமஞ்சள் வாசம் வீச
மங்களப் பெண்கள் மகிழ் வளையோசையோடு
சிறார்கள் மகிழ்ந்தாடும் சிரிப்புச் சத்தம்
கொஞ்சும் கொலுசோசை சொல்லிடுமே “பொங்கலோ பொங்கல்”.

வீதியெல்லாம் வாழ்த்துச்சொல்லும் வண்ண கோலத்தோடு
புத்தாடைகள் கேட்டுப்போகும் ‘பால் பொங்கியாச்சா
எக்காலமும் உண்ணத்தரும் உழவர் தமை
முக்காலமும் போற்றிச் சொல்வோம் “பொங்கலோ பொங்கல்”.

வேட்டி புடவைகளின் வியர்வைப் பட்டு
விளைந்த புதுநெல் வயல் அறுத்து
போகட்டும் கஷ்டமெல்லாம் போகி போல
பொஞ்சாதி பொங்கி வைத்தாள் “பொங்கலோ பொங்கல்”.

விற்று விட்ட நெல் மூட்டை
பாக்கட்டில் வந்தது பண வடிவில்
பண்டிகை வழி வந்த பேயெல்லாம்
பிடுங்கித் தின்றது பணச் சோறு
பாழாய் போன பணக் கட்டு
பதராய் பறந்தது பண்டிகை காற்றினிலே
மீதம் இருப்பதோ மிஞ்சும் உடல்
மீண்டும் உழவன் ஓடிப் போனான்
மற்ற பண்டிகைக்கு உழவுச்செய்ய....

உழவனின்
ஓயாத கஷ்டமெல்லாம் ஓய வேண்டும்
தங்காத பணமெல்லாம் தங்க வேண்டும்
பெய்யாத மழையெல்லாம் பெய்ய வேண்டும்
பொங்காத வளமெல்லாம் பொங்க வேண்டும்
தங்காத வளமெல்லாம் தங்க வேண்டும்
எங்கும் தமிழ் வாசம் வீசவேண்டும்
ஓங்கி புகழெல்லாம் வளர வேண்டும்
தமிழோடு உழவனும் தரணி ஆளவேண்டும்.







4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரர்
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. தங்காத வளமெல்லாம் தங்க வேண்டும்
    எங்கும் தமிழ் வாசம் வீசவேண்டும்
    ஓங்கி புகழெல்லாம் வளர வேண்டும்
    தமிழோடு உழவனும் தரணி ஆளவேண்டும்.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. என்ன கொடுமை சார் இது காலையில் இருந்து அனைவருக்கும் வாழ்த்தை திருப்பி சொல்லக்கூட முடியாத இண்டர்நெட் ஸ்பீட் எனதாகிப்போனதில் மிக மிக வருத்தம்......ரிலையன்ஸ் 153kbs போதுமடா சாமி. மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!