வெள்ளி, டிசம்பர் 27, 2013

தயவுச் செய்து படிக்கவும்


               


இஸ்தான்புல் சிறுகுறிப்பு வரைக.

உங்களுக்கு விடை சரியாக தெரிந்தால் சபாஷ். தெரியவில்லையா சரி பரவாயில்லை ஆப்ஷனில் விட்டுவிடுங்கள். விடை இறுதியில் காத்திருக்கிறது உங்களுக்காக.
                          
                              நான் என்னுடன் என் எதிர் வீட்டுக்காரர் மாட்டுவண்டி மூலம் மணல் விற்பனைச்செய்யும் தெரிந்த வண்டிக்காரர் அவருக்கு துணையாக வாரிக்கொட்டும் அவரது துணைவியார்....சார், இன்னும் கொஞ்ச தூரத்துல நல்ல மணல் இருக்கு சார், நீங்களே வந்து பாருங்க பிடிச்சிருந்தா நான் உங்களுக்கு ஓட்டித்தரேன் சார்  சரி வாங்க போய்தான் பார்ப்போம்....
மணல்.... மணல் .... ஐய்யய்யோ இது நல்லா இல்லையே வேற கொஞ்சம் தள்ளி பார்க்கலாம் …. ஓகே சார் ....அனைவரும் நடந்தோம்...நடந்தோம்....  சற்று மேடான மணல் பகுதி அனைத்தும் கற்களும் புற்களும் முளைத்து மணல் போல் இல்லை ...இன்னும் கொஞ்ச தூரம்... சிறிது நேரத்தில் பலத்த காற்று வீச கண்களில் பட்டு தேய்த்து .....என்னடா இது ஏன்டா வந்தோம் என்றாகி விட்டது. மேடு பள்ளம்... மேடு..... ஏறுகிறோம்.... ஏறுகிறோம் மிக உயரமான மணல் பகுதி....செடி கொடிகளைப் பிடித்துகொண்டு ஏறுகிறோம்.மலை ஏறுவதுபோல் காட்சியாகிப்போனது.   கஷ்டப்பட்டு சென்றால்...கீழே குனிந்துப்பார்த்தால் மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது.  என்ன செய்வது வந்தாச்சு கீழே இறங்கி செல்வதும் அவ்வளவு எளிதாக இருக்காது....குழப்பத்தில் அனைவரும் திகைத்துப்போனோம்.பிடிமானம் ஏதும் இல்லா நிலையில் தவறினால் என்னாகுமோ அச்சம்.
                             
 அங்கே தான் அந்த அதிசயம் ....வாட்டர் லைன் செல்லும் முக்கால் இஞ்ச் இரும்பு பைப்  இருக்கிறது........என்னது இங்கிருந்து எப்படி எதற்கு பைப் லைன்...?. எட்டிப்பார்த்தால் எதுவும் தெரியவில்லை. எங்கள் யாருக்கும் புரியவில்லை. பிடித்து இழுத்தாலும் அவ்வளவு உறுதியாய் இருந்த்து.   நான் பயத்தில் அதனை இறுகப்பற்றிகொண்டேன். சற்று மேலே எம்பினோம்... திடீர் பள்ளம் அனைவரும் வழுக்கி அதள பாதாளம் எங்கிறார்களே அதனைப்போல் மிக உயரமான இடத்தில் இருந்து கீழே உருண்டு உருண்டு ....... வந்து விழுந்தோம். நல்ல காலம் யாருக்கும் எவ்வித அடியும் படவில்லை மிக மிக ஆச்சரியமாக இருந்தது.
    
விழுந்த இடம் அதைவிட மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.... மிக மிக அழகான ஆற்றுப்பகுதி. இருபுறமும் பச்சை பசேல் என மரம் செடி கொடிகள்.... பொன்மாலைப்பொழுது அல்ல...அல்ல...வைர மாலைப்பொழுது ....மாணிக்க மாலைப்பொழுது என வர்ணிக்கும் அளவுக்கு அப்படி ஒரு அழகு. இந்த இடம் தான் பூமியின் மையபுள்ளியாம். இங்கே வர நமக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...என அங்கிருந்த நபர் எனக்கு விளக்கம் சொல்ல... என்னையே நான் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். சொர்க்கம் போல் அழகிய இடம். வண்ண வண்ண பலூன்கள் மரக்கிளைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன.அவற்றில் சிலவற்றை நான் கையில் ஏந்திக்கொண்டு அழகிய ஓடும் நீரில் பாதம் நனைத்தேன்...அப்பாடா என்ன ஒரு கிளர்ச்ச்சி உடலிலும் மனதிலும்...கனுக்கால் அளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடன் வந்தோர் அனைவரும் ஒருபுறம் செல்ல நான் நீரில் நடந்துக்கொண்டிருந்தேன்....ஓடி வந்த ஆற்று நீர் இரண்டாக பிரிந்து சென்று மிக ரம்மியமாக காட்சியளித்தது.நான் ஒரு வழியில் செல்ல செல்ல.... திடீரென மிக மிக ஆழமான பகுதி....நீர் சுழல்..... திக்குமுக்காடிப்போய் தண்ணீரில் வீழ்ந்து...மூழ்கி..... அடித்துசெல்லப்படுகிறேன் நீருக்கு அடியில் வண்ண பலூன்கள் ஏந்தி..... அதன்பிறகு....................




+1 அட்மிஷன் கிடைத்து உள்ளே நுழைந்தேன். ஸ்டெடி ஹால் நுழைவு வாயில் வழியே உள்ளே செல்ல எத்தனித்தபோது  எங்கள் ஊரைச்சேர்ந்த ஆசிரியை ஒருவர் அங்கே நின்றுக்கொண்டிருக்க ...நான் சங்கோஜப்பட்டு வேறு வழியாக உள்ளே சென்றேன்.. அங்கே அனைத்து டெஸ்க்குகளில் முக்கால்வாசி மாணவர்கள் இடம் பிடித்து அமர்ந்து இருக்க எனக்கு நினைத்தது போலவே அருமையான சனி மூலை கடைசி டெஸ்க்.   நண்பர்கள் பொறாமையுடன் சூப்பர்டா தூங்கினா கூட வார்டன் கண்டுபிடிக்க முடியாது...என வாழ்த்துக்கள் கூறினார்கள். வார்டன் ஸ்டெடி ஹாலில் நான் தூங்கிய பொழுது தயவு செய்து படிக்கவும் என எழுதி என் காதில் பேப்பரை சுருட்டி காதில் வைத்து விட்டு சென்றுவிட அதனுடனே நான் தூங்கி வழிய சகாக்கள் சிரித்து ....நான் எழுந்து..... அசடு வழிந்து சாரி கேட்டேன் ஆசிரியரிடம்.
இரவு சாப்பாட்டிற்கு பிறகு மேல் தளத்தில் படுக்கும் அறையில் மாணவர்கள் அனைவரும் உறங்கினோம்... காலை 5.13..மணியளவில் வார்டன் அவர்கள் அனைவரையும் எழுப்ப திணறிக்கொண்டிருந்தார்...எப்படி எழுப்புவது கரண்ட் இல்லை  மின்சார பெல் அடிக்க.  பக்கத்தில் இருந்த யாரையோ எழுப்பி எப்படி எழுப்புவது என கேட்க கை தட்டுங்க சார் னு சொல்ல அவரும் சேர்ந்து கைகள் தட்ட அதனைக்கேட்டு சில மாணவர்கள் எழ....அவர்களும் சேர்ந்து கைகள் தட்ட பயங்கர கரவொலி சத்தம்... அனைத்து மாணவர்களும் எழுந்து.................
அதன்பிறகு..........  நானும் தூக்கத்தில் இருந்து எழுந்துக்கொண்டேன்.

 இவை சில தினங்களுக்கு முன் நான் கண்ட கனவு.

 பின் குறிப்பு : 1989 ல் செயின் ஜோசப் மேனிலைப்பள்ளியில் நான் +1 படித்து முடித்து இன்று எவ்வளவு வருடங்கள் உருண்டோடியும் அடிக்கடி பள்ளி நிகழ்வுகள் கனவுகளாய் வருகிறது...
  
 மேற்கண்ட கனவுகளுக்கு பலன்கள் ஏதாவது இருப்பின் தெரிந்த அன்பர்கள் விளக்கிச்சொல்லவும்.

முதலில் கேட்ட கேள்வியின் பதிலுக்கு வருவோம்.

விடை:  இஸ்தான்புல் என்பது துருக்கி நாட்டின் தலைநகர்.

1987 ல் என் சக நண்பர்......... நிழச்சி நினைவில் உள்ளது அன்பர் பெயர் நினைவில் வரவில்லை..(செலக்ட்டிவ் அம்னீஸியாகவோ அல்லது ஷார்ட் டைம் மெமரி லாஸாக  இருக்குமோ ? )

தேர்வில் மேற்கண்ட கேள்விக்கு இவ்வாறு பதில் எழுதி இருந்தார்.


இஸ்தான்புல் என்பது ஒருவகை உயர்ந்த புல் வகை. இதனை உயர் ரக மாடுகளுக்கு உதாரணமாக ஜெர்சி, முர்ரா போன்றவைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். இதனை உண்ணும் மாடுகள் அதிக அளவில் பால் கறக்கும்...மாடுகள் கொழுகொழு என்று வளரும்...விடை எப்படி? எத்தனை மார்க்குகள் கொடுக்கலாம் ?.



4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!