புதன், டிசம்பர் 11, 2013

நவீன பாரதிஓடி விளையாடாதே பாப்பா-நீ 
 
    ஒழுங்காய் வீட்டுப்பாடம் முடித்திடு பாப்பா

கூடி விளையாடாதே பாப்பா- சில
  
    குண்டர்கள் கடத்திச்செல்வார் பாப்பா
காலை எழுந்தவுடன் காஃபி-பின்பு
    
   கலர் டிவி கொடுக்கும் நல்லபாட்டு

மாலை முழுதும் டியூஷன்- நீ
    
  மனதில் கொள்ளாதே டெங்ஷன்சில வார்த்தை மட்டும் பேசி- நீ
     
    செல்லில் சிக்கனம் செய்யவேணும் பாப்பா

ஆன்ராய்டு போனை வாங்கி- கண்ட
    
    ஆண்களுடம் அரட்டையடிக்கலாகாது பாப்பாடேட்டிங் செல்லாதே பாப்பா- பல
  
    டேஞ்சர்கள் வந்து சேரும் பாப்பா

ஃபேஸ்புக்கில் பழகாதே பாப்பா-நீ
    
     பேதலிச்சு போகாதே பாப்பாஅம்மாஅப்பா படும் கஷ்டம் கொஞ்சம் - நீ
    
    கருத்தில் கொள்ள வேணும் பாப்பா

கற்பு என்ற ஒன்றை கட்டாயம் – நீ
  
    கண்ணியம் காக்கவேணுமடி பாப்பா
கணினி கற்க வேணும் பாப்பா- கூட
  
    கிராபிக்ஸ்ஸூம் தெரிய வேணும் பாப்பா

ஜாவா கற்க வேணும் பாப்பா-பின்பு
    
    ஜம்முனு வாழலாமடி பாப்பா.
..................................................................................................
காணி நிலம் வேண்டாம் – பராசக்தி
    
     காணி நிலம் வேண்டாம், - கேகே நகரில்

 காலோடுகால் கிரவுண்ட் மனைபோதும்-அந்த
    
      அரைகிரவுண்டு பிளாட்டினிலே

அழகான சிறு வீடு போதும்.....
............................................................................போஸ்டர் தின்னுது வெள்ளைப்பசு-அங்கே

     போலத் தின்னுது கன்றுக்குட்டி.

மம்மி என்குது கன்றுக்குட்டி- உடன்

     மாயமாய் ஓடுது மம்மிப் பசு.
...............................................................

இன்று மாகவி பாரதியின் பிறந்த நாள் 11.12.13

இருந்து இருந்தால்.....

இப்படித்தான் எழுதவேண்டும் இன்று.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!