செவ்வாய், டிசம்பர் 17, 2013

கம்பியூட்டர் புதுக்குறள்பணி  நீவிர்  விரைந்திடு  செய்திடு

கணினி கொண்டு இவ்வுலகில்.
....................................................................


இணையத்  தேடல் எழுத்தெல்லாம் காண்பீர்

கூகுள் முதற்றே உலகு.
....................................................................


லாகின் செய்து ஆகிடு எண்ட்டர்

சீக்ரெட் செயல் யாவும்.
...............................................


கூகுள் யாகூஅமேசான் தேடுக தேடியபின்

தெளிக நல் அறிவு.
.......................................................


புக்கெடுத்து படியாதோர் உளர் உலகில்

ஃபேஸ்புக்கில் இல்லாதார் சிலரே.
.........................................................................


கணினி கல்லாதோர் கல்லார் கற்றார்

கம்பியூட்டர் இன்ஜினியர் ஆவர்.
..............................................................................


விண்ணக  மண்ணக  விபரங்கள்  யாவும்

விக்கிபீடியா விளம்புமாம் விரிவு.
...............................................................................


பசியெடுத்து ஆகாதார் டெங்ஷன் ஆகிடுவர்

பிசியாகிப் போனால் இண்டர்நெட்.
....................................................................


முகநக நட்பது நட்பன்று முன்னறியா

முகநூலில் நட்பதே நட்பு.
...................................................................


நோட்புக்கில் எழுதுவோர் கல்லார் கற்றார்

நோட்பேடில் எழுதுவர் கம்பியூட்டர்.
...............................................................


கற்க கசடற கம்பியூட்டர் கற்றபின்

நிற்க காசு தக.
.................................கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!