கா கா என
கரைந்தழைத்து நீ.....
காணாத எனக்கு
கை நிறைய உணவுடன்
இறகு வலிக்க
இரை தேடி
இப்பத்தான்
வந்தமர்ந்தேன்.
உன் கூப்பிடும் குரல்
கேட்கிறது.
உடலில் வலுவில்லை
வந்துன்
உணவை எடுக்க....
சகாக்கள் எல்லாம்
சலித்துப் போய்
சரணடைந்தோம் சன்னதி
மரத்தில்.
சத்தம் கேட்கிறது...
கா...கா.....
அமாவாசை விரதம் நீ
முடிப்பதற்கும்
மூதாதையர் நினைவுத்
திதி நாட்களிலும்
மட்டும் ...
நாங்கள்
உண்டபின்...நீ..
பௌர்ணமி அன்று நாங்கள்
விரதம்..
ஏனோ மனம்
லயிக்கவில்லை
மனித மனம்
புரியவில்லை
வராமலும் இருக்க
முடியவில்லை
வறுமை கோட்டிற்கு
கீழ் நாங்கள் வசிப்பதால்.
வடை பாயாசம் என்றாவதாவது
கிடைக்கிறது
செத்து மடிந்து இன்று
சிறுபான்மை
இனத்தவராய்
சுருங்கிப்போனோம்....
எங்கள்
சங்கதிகள்
அழிந்தொழியும் காலம்
சமிபித்து விட்டதாய்
எனக்குச் சந்தேகம்.
தினமும் நீங்கள் தின்றதில்
மீதி
தூக்கியெறிந்தாலாவது.....எங்கள்
துயர் நீங்கும்.
இல்லையேல் ............
சில காலங்களில்
மியூசியத்தில்
மட்டும்
கற்கலால்ஆன காக்கைகளுக்கு
நீங்கள்
படைக்கப்போகீறீர்கள்
அது வரைக்குமாவது
வந்து போகிறோம்
அனைத்துண்ணிகளாய்
உங்களைப்போல.....
அருமையான கவிதை! இப்பல்லாம் சாப்பாட்டை அளவாக மிச்சம் வைக்காமல் உண்டுவிட்டு பாத்திரங்களை கழுவி கவிழ்த்து விடுகிறார்கள் கவிஞரே! ஒருவராவது யோசித்தால் உங்கள் கவிதைக்கு அதுவே பெருமையை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை!
பதிலளிநீக்கு