புதன், மார்ச் 13, 2013

கேலிச்சித்திரம்வண்ணங்கள் வகை வகையாய் இருக்க
வரைதாள் பல அளவில் இருக்க
தூரிகைகள் பல தினுசில் இருக்க
வரைபவன் அனுபவத்தில்
தூரிகைகள் தேடும் கைகளைப்போல
வண்ணங்களை யோசிக்கும் எண்ணங்களைப்போல
எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம்
வாழ்க்கை வரைபடம் வரைய.
வாழ்க்கை என்னவோ.....

ஒவ்வொரு நாளும்
ஒய்யாரமாய் ஒப்பனை செய்துக்கொள்கிறது
கேலிச் சித்திரமாய்.
சங்கடங்களுடனும் சில சமயம் சந்தோஷங்களுடனும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!