ஞாயிறு, ஜனவரி 13, 2013

பொங்கல் வாழ்த்து
தை... தை...

தை தை என தவழ்ந்து வருவாளோ...
தை மகள்.
தைய தக்கா தைய தக்கா யோசையுடன்
தையல் அவள்.

தங்க தமிழ் எழுத்தில்
சர்க்கரை சாயம் தோய்த்து
சந்தோஷ சட்டைப் போட்டு
புன்னகை பொங்கல் இட்டு
சந்தித்தித்துக் கொண்ட போது
சமாதான வாழ்த்துக் கூறி - என்னாளும்
சிரித்து கொண்டாடிடுவோம்...
பொங்கலோ பொங்கல் ! .

புத்தாண்டும் வந்ததுவே
புதுப்பொலிவும் தந்ததுவே !

நித்தமும் உழைத்திங்கு
நிம்மதி பெற்றிடுவோம் !

பாலியல் கலாச்சாரம்
பாடையேற்றி கொளுத்திடுவோம்!.

சகோதர பாசத்திற்கு
சான்றாவோம் சாட்சியாவோம் !.

சமாதான வாழ்வை நாளும்
சம்மதித்து வாழ்ந்திடுவோம் !.

தீயவை மறந்திங்கு
தூயவற்றை காத்திடுவோம் !.

புதுப்பானை பொங்கலுடன்
பெற்றிடுவோம் புதுவாழ்வு !.

அன்பை சுமந்திங்கு
ஆண்டிடுவோம் அகிலமெல்லாம் !.
3 கருத்துகள்:

 1. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .!!!

   நீக்கு
  2. வாழ்க வளமுடன்! இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!