சனி, டிசம்பர் 08, 2012

நீ
நான்
வானத்தில் பார்க்கிறேன்
உன் நெற்றி போன்ற பிறைநிலா.

வனத்தில் பார்க்கிறேன்
உன் பற்கள் போன்ற
முல்லை மலர்கள்.

நீரில் பார்க்கிறேன்
உன் கண்கள் போன்ற மீன்கள்.

பட்டில் பார்க்கிறேன்
உன் பாதம் போன்ற மென்மை.

உன் நடையைப் போல்
அன்னம் நடக்கிறது.

உன் இடையைப் போல்
உடுக்கை இருக்கிறது.

உன் குரலைப்போல
குயில் கூவுகிறது.

உன் முகத்தைப்போன்று
தாமரை இருக்கிறது.

எல்லாம் இப்படி இருக்க.....

மோசக்கார கவிஞர்கள்...

மாற்றி மாற்றி பொய் சொல்கிறார்கள்....

பிறை நெற்றி... முல்லைபோன்ற பற்கள்....
அன்ன நடை....உடுக்கை இடை.....தாமரை முகம்...

இது எவ்வளவு பெரிய அபத்தம்.......
கவிஞர்களுக்கு 
ஏன் இந்த வேண்டாத வேலை....

உன்னைப்போல் மற்ற
எல்லாம் இருக்கிறது...என்று

ஒற்றை வரியில் சொன்னால் என்ன ?........1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!