வெள்ளி, டிசம்பர் 07, 2012

கவிஞன்


                

மெளனம் அவனது தனி மொழியாகும்

தனிமை அவனது சொந்த வீடாகும்

இயற்கை அவனது பிரியாத உறவாகும்

எழுதுகோல் அவனது ஆறாம் விரலாகும்

கற்பனை அவனது வாழும் உலகாகும்

கனவு அவனது வார்த்தை கருவாகும்

காகிதம் எல்லாம் அழகிய கவியாகும்.

    
         கவிஞன் ஓர் உழவன்

எழுத்துக்கள் என்ற ஏர் ஓட்டி

வார்த்தைகள் என்ற விதை விதைத்து

கவிதை என்ற பயிர் அறுப்பான்.


       
       கவிஞன் ஒரு மீனவன்

எழுத்துக்கள் என்ற படகேறி

வார்த்தைகள் என்ற வலை வீசி

கவிதை என்ற மீன் பிடிப்பான்.


கவியாக்குவதால் அவன் கவிஞன்;

தான் அறிந்ததை -பிறர்
அறியச்செய்வதால் அறிஞன்;

சிந்திப்பதாலும் சிந்திக்கச்செய்வதாலும்
சிந்தனையாளன்;

எல்லாம் சுருக்கி

படைப்பதால் அவனும் பிரம்மன்.

பழங்கால சிந்தனையாளருக்கு கிடைத்த
பட்டம் என்ன தெரியுமா ?
பைத்தியக்காரன்.

ஆனா இப்ப -
பதிவர்கள்......(இது ரொம்ப பரவாயில்லை)


(ஆமாங்க நீங்க சொல்றதும் சரிதான். யாருமே வராத

 இந்த பக்கத்துக்காக இந்த ஆத்து ஆத்துறனே.....

நான் ஒரு ---------------------------------

இதை நீங்க தான் நிரப்பனும்.)
3 கருத்துகள்:

 1. “நீங்களும் ஒரு பதிவர்!“

  நான் நிரப்பி விட்டேன்.
  ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 2. இதைவிட கவிஞர்கள் குறித்து
  அழகாகத் தெளிவாக
  வித்தியாசமாகச் சொல்வது கடினமே
  மனம் கவர்ந்த அருமையான கவிதை தந்தமைக்கு
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!