புதன், டிசம்பர் 26, 2012

ம்.............


உன்

'ம்' என்ற

ஓர் எழுத்து

ஒப்புதலுக்காய்

காலமெல்லாம்

காத்துக்கிடக்கிறேன்.

நீயோ

கண்ணைக் கட்டிக்கொண்டு...

காற்றில் வீசும் வாசம் மட்டும்  சுவாசிக்கிறாய்.....

கொஞ்சம்

கண் திறந்து பார்.

உனக்காக

 நான்

நட்டு வைத்த ரோஜாக்களின்

வண்ணங்களையும்

என்

எண்ணங்களையும்.....

காத்திருத்தல்

எவ்வளவு

கடினமானது....

கண்ணா மூச்சி ஆட்டம் போதும்

ரோஜாவாய் நான்

உதிர்வதற்குள்

சொல்லிவிடேன்

ம் என்ற ஒற்றை மந்திரம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!