புதன், டிசம்பர் 19, 2012

வெற்றுக் கவிதை


          
    

எழுத நினைக்கிறேன்

ஏனோ மறுக்கிறது மனம்.

எதை எழுதுவது
எண்ணங்கள் தோன்றவில்லை.

எண்ணியது ஏதோ ஒன்று
எழுதுவது ஏதோ ஒன்று.

ஒன்று மாற்றி ஒன்று
ஒட்டாமல் போனது வார்த்தைகள்.

எண்ணியது எதுவாக இருக்கும் ?
கவிதை....?

எழுதியது என்ன ..?

எனக்கு
எண்ணத்தோன்றவில்லை
கவிதை என்று இதனை...

காரணம்...

கவியென்றால் கரு இருக்க வேண்டும் -இக்
கவிக்கு கரு என்ன ..?

கரு இருந்து கவியானால்
காலம் போற்றும்.

வார்த்தை ஜாலத்தால் –கவியை
வளைக்க முடியாது-அது
வெற்றுக்கவிதை.

கண்,காதல்,கிளி,கோவில்
பணம்,பாவை,பிறர்,புயல்
மண்,மான்,மேகம்,மொழி
வண்ணம்,வானம்,விலைவாசி,வீரம்

இப்படி

கரு
எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

இன்னும் எனக்குப் பிடிபடவில்லை
இதைத்தான் எழுத போகிறேன் என்று.

அனுபவம் எழுதினால் – அடுத்தவற்கு
அடுத்தடுத்து உதவும்.

இலக்கியம் எழுதினால் – படிப்பவற்கு
இனிமை கொடுக்கும்.

இப்படி எதுவே இல்லாமல்
எப்படி
என்னால் எழுத முடிகிறது.

என் எண்ணத்தை மேம்படுத்த வேண்டும்.

எப்படியேனும்

எதையாகிலும்

எழுதிவிட

கவிதையென்று.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!