திங்கள், டிசம்பர் 17, 2012

மாயை


    காதல் மாயம்


பெண்ணிலா உன்னைக் காண
எண்ணில்லா இன்பம் கொண்டேன்
உன்னிலே என்னை வைத்து
தன்னிலை மறந்திருந்தேன்.

சொல்லிலே இன்பம் இல்லை
கள்ளிலே போதை இல்லை
கனியிலும் சுவை இல்லை
கணிப்பொறியிலும் இயக்கம் இல்லை.

என்னிலே உன்னை வைத்தாய்
தன்னிலை மறக்கச் செய்தாய்
முள்ளிலே மலரென்றாய் –என்னில்
மாயையை வளர்க்கின்றாய்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!