வெள்ளி, நவம்பர் 09, 2012

'அந்த' நேர அவஸ்த்தை


அந்தநேர அவஸ்த்தை


அந்த நேர அவஸ்த்தையை நீங்களும்
அனுபவித்து இருப்பீர்கள்
நான்-நேற்றும்
அனுபவித்தேன்.

அப்பா அம்மா வெளியில் சென்றிருந்த
சாயுங்கால நேரம்.......

பக்கத்து வீட்டில்
பஜ்ஜி சாப்பிட கூப்பிட்டார்கள்
பரவாயில்லை என்று பெருமிதத்தோடு
கூறிவிட்டேன்......(காரணம் ??? ).

பொம்முகுட்டிக்கு பிறந்த நாளாம்
கேக் கொண்டு வந்தாள்- நான்
கேட்டிருக்க கூடாது தான்....
“கொஞ்சம் ஊட்டி விடரயா ?
நான் பக்கத்து வீட்டுக்கும் கொடுக்கனும் என்று
டேபிலில் ‘டொம்மென
வைத்துவிட்டு ஓடிவிட்டது
வாண்டுகள்....


கையிருந்தும்
கடித்த கொசுவை அடிக்க முடியவில்லை.
கடித்தகொசுவால் எனக்கு
வரப்போவது என்ன
மலேரியாவா ? டெங்குவா ?
காத்திருந்து தான்
கண்டறிய வேண்டும்....


முதுகில் ஏறிய பூச்சி......
தட்டிவிட துடித்தேன்.
தங்கச்சியை கூப்பிட்டால்
“போடி இவளே என்று
சமயம் பார்த்து சங்கறுத்தாள்.....

‘எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்....!!!

இரவு சாப்பாட்டிற்குப் பின் செய்திருக்க வேண்டும்
சாயுங்காலம் செய்தது -
சரியான தவறு.

தலையில் சொரிய வேண்டும் போல் இருந்தது..
போதுமடா அவஸ்த்தை.....
கை கழுவி
கட கட வென
கையால் பிடித்தேன் பேனை....
“கடித்தாயா? என்னை
கொன்று போட்டேன்.

அப்பாடா.....
கையில் மருதாணி வைத்திருக்கும் நேரம்....
அநியாய அவஸ்த்தை.
மொத்தத்தில்....
மருதாணி---------
மிகப்பெரிய சந்தோஷம்
மகாப் பெரிய அவஸ்த்தை...
உங்களுக்கு எப்படி ?......




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!