சனி, நவம்பர் 17, 2012

புனித அந்தோணியார் பஜனைக்கோவில்_நெடுங்கம்பட்டு


புனித அந்தோணியார் பஜனைக்கோவில்_நெடுங்கம்பட்டு

நெடுங்கம்பட்டு கிராமத்தில் மூதாதையர்களால் துவக்கப்பட்டு இன்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ”புனித அந்தோணியார் பஜனைக்கோவில்”மிகவும் பழமை வாய்ந்த்தது.  பல்வேறு நிலைகளில் இருந்த இக்கோவில்23.02.1993அன்று புதுப்பிக்கப்பட்டு ஆண்டுதோரும் ஆடிமாதம் இரண்டாம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் திருத்தேர் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
திங்கட்கிழமை அன்று  ஊருக்கு தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் முன்னோர்களுக்கு காட்சியளித்த இடத்தில் சிறப்பு வழிபாடும், பெரிய ஏரியில் அன்னதானமும் வழஙகப்படும்.வழிபாடுகளில் யாவரும் கலந்துக்கொள்ளலாம்.  இவையாவும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறும்.
செவ்வாய் கிழமை காலை 7.30 மணியளவில் பஜனைக்கோவிலில் சிறப்பு திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அன்று முழுவதும் சிறப்பு ஜெப வழிபாடுகள் செய்யப்படும். மாலை9.00 மணியளவில் வாணவேடிக்கைகளுடன்  புனித அந்தோணியாரின் ஆடம்பரத் திருத்தேர்பவனி  தொடங்கி அதிகாலையில் தேர்பவனி முடிவுபெறும்.
தொடர்ந்துவரும் ஞாயிறு அன்று திருவிழாவிற்கான வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட
நிறை -குறைகளை கேட்டறிந்து  அடுத்த ஆண்டுகளில் குறைகள் களைய  கருத்துக்கள் கேட்டறிந்து குறிப்பெடுத்து ஆவணப்படுத்தப்படும்.

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!