சனி, நவம்பர் 17, 2012

வண்டிக்காரன்

வண்டிக்காரன்



வாய் நிறைய ஆங்கிலம்
 கைநிறைய சம்பளம்,வாங்கி வந்த மகனைப்பார்த்து வண்டிக்காரனுக்கு  பெருமையுடன் வேதனை.
கம்பியூட்டர் படிச்சுப்புட்டான் பாரினுக்கு பறந்து விட்டான்
பங்காளி வீட்டுக்காரன் பேரைக்கூட மறந்து விட்டான்.
ஊரா இது உச்சுக்கொட்டிசொல்லிப்புட்டான்.வேளா வேளைக்கு ஒழுங்கா மருந்து மாத்திரை சாப்பிடு செல்லிலே சத்தம் போட்டான்.

எலே திருமலை ! எனக்குத் தெரியாதா ?
அன்று-----
மணல் அள்ளி மல்லாட்டை பயர் திண்ணு  செங்கல் சூளையிலே சரம்சரமா கல் அடுக்கி, கம்பங்கூழ் குடித்து கழனியிலே கதிர் அறுத்து ....வண்டிக்கு வண்ணம் போட, விறகு வெட்டி வித்துபுட்டு......
ஒத்தையிலே உர மூட்டை தூக்கிப்போட்டு.....காளையை காணலியே காடு மேடு தேடி...... ஓடி........
நண்டு புடிச்சி, நாட்டுக்கோழி அடிச்சி நல்லெண்ணெய் ஊத்தி ஆச்சி கையால அத்தனையும் திண்ணுப்புட்டு.......


காப்பி தண்ணியில சக்கரை  யை ஒழுங்கா போடத்தெரியலியே
நான்திட்ட
கள்ளு குடிச்ச நீ காசு பணம் தாரலியே
உங்கம்மா என்னைத் திட்ட,
எங்கம்மா அவளைத் திட்ட,
அவங்கம்மா எங்களைத் திட்ட.......
ரத்தம் கொதிக்குது என் அக்காள் திட்ட.....
எங்களுக்கும் தான்- மச்சான்கள் மல்லு கட்ட......
சாயங்காலம் ஆச்சுதுன்னா சம்பந்தி அப்பன்கள் சாராயம் குடிச்சிப்புட்டு  சமாதானம் செஞ்சுவக்க..வாய்க்கா வரப்புக்குள்ளயும்
வண்டி ஓட்டி....வண்டி ஓட்டி உழைச்சதெல்லாம் அந்தக்காலம் ஒரு நோயும் வாரலியே......
இன்று..............
வேலைக்கு நீ போன பின்னே.... வித்துப்புட்ட மாட்டு வண்டி, செத்த வச்ச வீட்டு  சுவரெல்லாம் இடிச்சி தள்ளி...... மாடி வீடு கட்டி...... மாட்டு வண்டி நின்ன இடம் இப்ப மாருதி கார் நிக்க வச்ச....உக்காந்து சாப்புடுனு  ஒய்யாரமா பறந்து விட்ட....
இப்ப......
ஓட்ஸ் கஞ்சியும்,
ஒரு வேளை சாதமும்,
மூன்று வேளை மாத்திரையும்,
என்னை சுமாராக வைத்துள்ளது.
பி. பி யும் , சுகரும்
கண்ட்ரோலில்  தான் உள்ளது.
கவலைப்படாதே !  -   நீ
கண்ணாடி  பவர்  மாத்திட்டியா ??????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!