திங்கள், நவம்பர் 07, 2011

வாழ்க தமிழ்

தமிழ் வாழ்க!                 நல்மனத் தமிழன் வாழ்க !!

காதல் மொழியே கன்னித்தமிழே !
காதில் பாயும் நல்லிசை அமுதே !
     சொற்சுவைமிக்க நற்சுவைக் கனியே !
      பற்சுவைப்பொங்க பாடும் நா உனையே !
நற்றமிழ் கற்றச் சொல்லேர் மறவன்
முத்தமிழ் கற்ற அவன்பேர் புலவன் !
      மோனையோ அவன்கொண்ட சேனை !
      எதுகையோ அவன் பெற்ற இரு(க்)கை
மொழியாய் திகழும் அழியாப் பொருளே !
வாழிய தமிழே ! வாழிய நீயே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!