வெள்ளி, அக்டோபர் 14, 2011

வழிகள் பலவிதம்

கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி.   நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டுவழி.     நல்லவனுக்கும்  நல்லவனுக்கும் மூன்றுவழி.
எப்படி  ?

ஒரு மரிசைமேல் ( வயல்வெளியில் இருக்கும் ஒருவழிப்பாதை) 
ஒரு கெட்டவனும் மற்றொரு கெட்டவனும் எதிரெதிரே வருகிறார்கள்.இருவரும் ஒதுங்காமல் நீ வழிவிடு நீ வழிவிடு என்று சண்டைபோட்டுக்கொண்டு அப்படியே நிற்பார்கள்,அவர்களுக்கு தெரிந்தது அந்த ஒரேவழி தான் . அதே பாதையில் ஒரு கெட்டவனும் ஒரு நல்லவனும் வருகிறார்கள் என்றால் நல்லவன் அவனுக்கு வழியைவிட்டு ஒதுங்கி கீழே இறங்கி வேறு பாதையில் செல்வான்.இப்பொழுது அவர்களை அறியாமல் இரண்டு பாதை அமைக்கப்படுகிறது.கெட்டவன் செல்லும் மரிசை பாதை ஒன்று, நல்லவன் அமைக்கும் புதிய பாதை ஒன்று.ஆக இரண்டு பாதை.அதே பாதை வழியே இரண்டு நல்லவர்கள்  வருகிறார்கள் .ஒருவன்  அவன் மரிசைமேல் செல்லட்டும் என்று இவன் கீழே இறங்கி நடப்பான். மற்றொருவனும் இவன் செல்லட்டும் என்று அவன் கீழே இறங்கி நடப்பான்.இருவரும் அமைக்கும் புதிய பாதைகள் இரண்டு . பழைய மரிசை ஒருபாதை ஆக மொத்தம் மூன்று பாதைகள்.
இப்படி நல்லவர்களாக நடந்துக்கொண்டால் வாழ்கையில் என்றுமே தொல்லைகள் வராது. புதியகோணங்களில் வாழ்கை சுமூகமாக செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!