என்றும் மறவா இதய உறவுகளுக்கு வணக்கம்,
எல்லா
விளம்பரங்களிலும் ‘கண்டிஷன் அப்ளை’ என்ற வார்த்தை கண்ணுக்கே தெரியாது. சில இடங்களில்
எண்களும் எழுத்துக்களும் மிகமிகச்சிறியதாக பதிவிட்டு இருப்பார்கள் இது பல
நேரங்களில் நம்மை சிக்கலில் மாட்டிவிடும். “ஓ! அப்படியா நீங்க சொல்லவே இல்ல”
அப்படினு நாமும், “நீங்க தான் சரியா படிச்சிப்பார்க்கல” னு அவங்களும் வாதிடுவது
வழக்கமாகிவிட்டது.
ஏதாச்சும் புரியுதுங்களா.....!
Font size ! Font size ! Font size ! Font size ! Font size ! ! Font size !
ஆமாங்க எழுத்தின் அளவை, கூட்டி குறைத்து நம்ம கண்ணுக்கே தெரியாத அளவுகளில்
பதிவிட்டு இருப்பாங்க. சிக்கலில் மாட்டிவிட்டுவாங்க.
முக்கியமா ரீசார்ஜ் கார்டுகள், பேங்க் விளம்பரங்கள், ஷேர்மார்கெட்
விளம்பரங்கள்.... போன்றவை.
சரிங்க !
தாள்களில் உள்ள அந்த மிகச்சிறிய எழுத்துக்களையும் எண்களையும் சுலபமா நாம பெரியதாக்கி பார்க்க மிக மிக எளிய வழி தான் Top 1 tips.
இப்ப ஏறக்குறைய எல்லார்கிட்டயும் நல்ல கேமரா குவாலிட்டி உள்ள, ஸ்மார்ட் போன்
இருக்கு. அதனால, உங்க மொபைல் போனை எடுங்க கேமராவை 'ஆன்' பண்ணுங்க..
அந்த எழுத்துக்களை 'ஜூம்' பண்ணுங்க. ஈஸியா படிங்க. ஓகே வா !
பின் குறிப்பு:- (என்னுடைய ரகசியத்தை யாருகிட்டயும் சொல்லாதீங்க). நான்
இப்படித்தான் கண்ணாடி போடாம காலம் தள்ளுறேன்.
நீங்களும் டிரைப் பண்ணிப்பாருங்க! உங்க அன்பர்களுக்கும் பகிர்ந்துக்கொள்ளுங்க.
நன்றி!!!
இப்படிக்கு,
என்றென்றும்
அன்புடன்
- Kingraj
- Kingraj
நல்ல தகவல் நண்பரே இராணுவ ரகசியங்களுக்கு உபயோகப்படுத்துவேன்
பதிலளிநீக்கு