திங்கள், மே 09, 2016

எம் எல் ஏ னா சும்மாவா?... 
வேட்பு மனுதாக்கல் செஞ்சா ரெண்டு பிரச்சனை
வேட்பு மனு ஏத்துப்பாங்களா? ஏத்துக்க மாட்டாங்களா?
ஏத்துக்கலைனா பிரச்சனை இல்லை
ஏத்துக்கிட்டா ரெண்டு பிரச்சனை

ஜெயிப்போமா? ஜெயிக்க மாட்டோமா?
ஜெயிக்கலைனா பிரச்சனை இல்லை
ஜெயிச்சா ரெண்டு பிரச்சனை
மினிஸ்டர் போஸ்டிங் கிடைக்குமா? கிடைக்காதா?
கிடைக்கலைனா பிரச்சனை இல்லை
கிடைச்சா ரெண்டு பிரச்சனை
தொடர்ந்து அஞ்சு வருஷம் நீடிப்போமா? நீடிக்கமாட்டோமா?
நீடிக்கலைனா பிரச்சனை இல்லை
நீடிச்சா ரெண்டுபிரச்சனை
அதிக சொத்து குவிப்பு வழக்குல மாட்டுவோமா? மாட்டமாட்டோமா?
மாட்டலைனா பிரச்சனை இல்லை
மாட்டினா ரெண்டு பிரச்சனை
சொத்து10 சதவீதத்துக்கு அதிகமா இருக்குமா? இருக்காதா?
10 சதவீதத்துக்கு அதிகம் இல்லைனா பிரச்சனை இல்லை
அதிகமானா ரெண்டு பிரச்சனை
கேசு நம்ம மாநிலத்துல நடக்குமா? வெளிமாநிலத்துல நடக்குமா?
நம்ம மாநிலத்துல நடந்தா பிரச்சனை இல்லை
வெளிமாநிலத்துல நடந்தா ரெண்டு பிரச்சனை
குமாரசாமி போல யாராவது கிடைப்பாங்களா? கிடைக்கமாட்டாங்களா?.......
இப்படி ஏகப்பட்ட டெங்ஷனோடதாங்க எம் எல் ஏ வாக வாழமுடியும்
ஆகவே......
ஒரு  யோசிச்சு நல்ல ஆளா மாட்டி விடுவோம்.

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!