புதன், டிசம்பர் 18, 2013

மீளும் உன் இளமை

        

சிரிப்பாகி போக வேண்டும் வாயெல்லாம்
சிறப்பாகி போகுமது உன் வாழ்க்கை
புன்முறுவல் பூப்பாயே பிறர்தனைப் பார்த்து
புவிதனில் சிறப்பாகி மீளும் உன்இளமை.


உழைப்பதனை செய்வாயே செம்மையோடு உன்
பிழைப் பதுவே சிறப்பாக்கும் வாழ்க்கை
வளம் வந்துச்சேரும் நலமாகும் குடும்பம்
பலமாகும் பொருளாதாரம் மீளும் உன்இளமை.


உடல்கொண்டு செய்துவர நாளும் பயிற்சி
திரள்கொண்டு எழுமே புதுப்புது முயற்சி
உழைத்து களைத்த உன் உடலெல்லாம்
பிழைக்கும் திசுக்கள் மீளும் உன்இளமை.


ஏதோவழியில் செய்தால் பிறருக்கு உதவி
யாதோகிடைக்கும் மனதில் ஒரு மகிழ்ச்சி
தீதோ நன்றோ தலை தூக்கிப்பார்த்து
தூய்வினை யாற்றின் மீளும் உன்இளமை.


இதயம் புரிந்தவரோடு இங்கிதம் பேசி
பதமாய்கழி காலம் சில நேரம்
இதமாய் பழகி மிதமாய் உண்டால்
பழையன ஒழிந்து மீளும் உன்இளமை.


உற்றார் பெற்றார் உறவுகளோடு நீயும்
கற்றார் கல்லார் பொல்லார் நல்லார்
உள்ளார் இல்லார் தெள்ளார் தெளியார் –யாரையும்
சொல்லால் இனிமையாக்க மீளும் உன்இளமை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!