செவ்வாய், மே 07, 2013

தாயைத் தவிர...சொல்ல நினைப்பதை
சொல்லத்தெரியவில்லை.

பேச நினைப்பதை
நீயே பேசி விடுகிறாய்.

நான் செய்ய வேண்டியதை- பல சமயம்
நீயே தீர்மானிக்கிறாய்.

குரலின் தொணியை வைத்தே
தீர்மானித்துவிடுகிறாய் என் தேவைகளை.

அழும்போது அழவும்

சிரிக்கும்போது சிரிக்கவும்....

எல்லாம் நன்மைக்கே!

தாயைத் தவிர

எவரால் முடியும் அத்தனையும்.1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!