வெள்ளி, ஜனவரி 04, 2013

விடுகதைகள்


பொழுது போக்கு.....

இக்காலத்தில் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் 

வந்துவிட்டன.பெரியவர்களுக்கு பீச்,பார்க்.இப்படி....சிறியவர்களுக்கு 

கிரிக்கெட்..கம்பியூட்டர் கேம்ஸ்..இப்படி...இடைப்பட்ட வயதினருக்கு 

இன்டெர்னெட்டும்.....இத்யாதிகளும்...சுற்றுலா செல்ல சொகுசு 

வாகனங்கள்....இப்படி நம்ம காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது.


ஆனால் அந்த காலத்தை நினைத்துப்பாருங்கள். 

பொழுது சாய்ந்தவுடன் 

சாப்பிட்டு விட்டு நிலா வெளிச்சத்தில் விளையாடுவார்களாம் பெண்கள் 

கும்மி, கோ-கோ...இப்படி. ஆண்கள் கபடி, கோலாட்டம் என.... சிறுவர்கள் 

கண்டுபிடித்தல் விளையாட்டு...தாத்தா பாட்டிகள்.. பேரப்பிள்ளைகளுக்கு 

கதை கூறுதல் நாட்டுப்புறப்பாட்டுகள் சொல்லித்தருதல்,வெடி 

(விடுகதைகள்) போடுதல் இப்படி ....பொழுதுகள் போயின...

வெடி=விடுகதை
               
விடுகதைகள் பல வகையில் மூளைக்குவேலை தரும் நல்ல பயிற்சியாக 

அமைந்துள்ளது..இவற்றில் அறிவியல்,கணக்கு,என அனைத்து வகையிலும் 

அமைந்து பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு தேவையான சமயோசித 

புத்தி, தீர்வுகாணல்,மனப்பயிற்சி, தைரியம், ஞாபகத்திறன் வளர்த்தல் என 

வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத்திறன்களை வளர்த்துள்ளன 

என்றால் மிகையாகாது..

நையாண்டிச்செய்தல், கிராமத்து குசும்பு (டபுள் மீனிங் ) இவற்றில் 

பேசுதல்...அறிவுத்திறன் என அனைத்து ஞானமும் கரை புரண்டு 

ஓடியிருக்கிறது.  சில விடுகதைகள்...இங்கே




பொது :1. மலை மேல ஏறினேன்
மடி காய் பறிச்சேன்
ஒரு காய் தின்னேன் தெகிட்டிச்சுப்போச்சு. அது என்ன ?
.......................................................................................................................

2. ஒரு நெல்லு குத்து

ஊரெல்லம் உமி ...அது என்ன ?
............................................................................

2-1 : 

பல்லில்லாதவன் கடிப்பான்

பல்லுல்லவன் கடிக்க மாட்டான்...அவங்க யாரு ?
......................................................................................................................

3. தாய் இனிப்பாள்

மகள் புளிப்பாள்

பேத்தி மணப்பாள் அவர்கள் யார் ?
..........................................................................................

4. அடிச்சா வலிக்கும்

கடிச்சா இனிக்கும் அது என்ன ?
........................................................................................

5. செடியில சிவப்பு

தண்ணியில தங்கம்

மரத்துல கோண ......அவை என்ன ?
...........................................................................................

6. சின்ன மச்சான்

குனிய வச்சான்... அது என்ன ?
................................................

7. சுத்தி கல்லுக்கோட்ட

நடுவுல செல்லப்பிள்ள..... அவை என்ன ?
..............................................................

8. ஒட்டு திண்ணையில

பட்டு புடவை காயுது...     அது என்ன ?
......................................................................................

9. அண்ணணுக்கு எட்டாது

தம்பிக்கு எட்டும் . அது என்ன ?
........................................................................

10. மூடி மூடி திறக்கும் ஜிங்கிலிப்பெட்டி

அதுக்குள்ள எட்டிப் பார்ப்பா குட்டி பாப்பா..... அவை என்ன ?
..........................................................................................

11. வெள்ளை வீட்டுக்கு

வாசல் இல்லை.... அது என்ன ?
..............................................................................................

வானியல்  

12. அம்மா புடவையை மடிக்க முடியாது.

அப்பா பணத்தை எண்ண முடியாது.   அது என்ன?
..............................................................................................................................
கணக்கு :

சின்ன சின்ன கணக்குகளுக்கு கூட கால்குலேட்டரை பயன்படுத்தும் நாம் இதுக்கு விடை கண்டு பிடிப்போம். (கால், அரை, முக்கால் (பின்னம்) வாய்ப்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் பழங்கால பெரிசுகள் நம்மாள முடியாது சாமி.

13. ஒரு ஏரி..அதுல ஆறு மதகு.ஆறு மதகிலும் ஆறு குருவி. ஆறு குருவிகளுக்கும் ஆறு குஞ்சு குருவி..ஒரு குருவிக்கு ¼ படி தானியம்.... அப்படினா மொத்தம் எத்தனை குருவிங்க...எவ்வளவு தானியம்...?
................................................................................................................



14.  ஒரு அரசனிடம் புலவர் இப்படி பரிசு கேட்டாராம்.
சதுரங்க பலகை யில் ( செஸ் போர்ட் ) முதல் கட்டத்தில் ஒரு காசு..... அடுத்தடுத்த கட்டங்களில் அதனின் மடங்கு என மொத்த கட்டத்தில் அடுக்கி கடைசியா எவ்வளவு வருகிறதோ அதை தாருங்கள் என்றாராம்...அப்படினா அரசன் கொடுத்த மொத்த காசுகள் எவ்வளவு ?
............................................................................(.கம்பியூட்டர்ல கணக்கு போட்டாவது யாராவது சொல்லுங்க.(...........................


குசும்பு : டபுள் மீனிங்.


15.     நீ நீட்ட
  நான் மாட்ட ........அது என்ன ?
.........................................................................

16. அழகான பொண்ணுக்கு
அடியில ஓட்ட .............. அது என்ன ?
.............................................................

17. மாமா என்ன பாரு
மேல ஏறு
கீழ தள்ளு
வேலைய பாரு.......... அது என்ன ?
...............................................

18. குடுகுடுனு ஓடினான்
மல மேல ஏறினான்
மூனையும் கடிச்சான்
மூச்சாவ குடிச்சான்..........அது என்ன ?
....................................................

சம யோசித புத்தி :

19.  எங்க வீட்டு சேவல்
உங்க வீட்டுல முட்டையிட்டா
முட்டை யாருக்கு சொந்தம் ?
....................................................................

20. கண்ணு தெரியாதவன்
காது கேக்காதவன்
வாய் பேச முடியாதவன்
மூனு பேரும் போற வழியில
ஆலமரத்துல இருந்து ஆப்பிள் விழுந்தா
முதல்ல யாரு எடுப்பாங்க ?
................................................................................

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!