திங்கள், டிசம்பர் 03, 2012

கடிதம்



கடிதம் .......


அன்புள்ள சகோ.....



தெய்வமாய் தெரிந்த
தபால்காரர் இன்று
தேவை இல்லாமல் ஆகிவிட்டார்.


வழியில் பார்த்தால்
வேண்டா வெறுப்பாக
வணக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது.


'சார் போஸ்ட்'
யாராக இருக்கும் ?
சந்தேகங்களையும்
சந்தோஷங்களையும் 
முகத்தில் ஏந்தி- நாம் 
வாங்கி வந்த கடிதங்கள்.  

முகவரி முழுதும் எழுத
மூன்று வரி போதவில்லை
புலம்பியது அந்த காலம் ஆகிவிட்டது.

எக்ஸ்ட்ரா கோடுப்போட்டு எழுதி வைப்போம்-
அட்ரஸை.
















அன்புள்ள அம்மாவிற்கு.....
இப்படி எழுதுவது எத்தனை சுகமாய் இருந்தது......
ஆயுளைக்கூட்டியது அனைவருக்கும்...


தங்கும் விடுதியில்
தங்கிப்படித்த பிள்ளை எழுதியது...
அன்புள்ள அப்பா அம்மாவிற்கு...
என்னைப்பார்க்க வரும்பொழுது
‘திண்பண்டங்கள் அதிகமாக வாங்கி வரவும்
வேற எதுவுமே எழுதவில்லை....பாவிப்பயல்.


பட்டாளத்திற்குப் பயணமான பையன்
பத்திரமாகப் போய் சேர்ந்தானா ?....அப்பா.... அம்மாக்கள்...
கடிதம் வரும் என காத்திருக்கும்
காதல் மனைவிகள்.


தூர தேசம் போன
துணைவனின் கடிதம்.......
அன்பு முத்தங்களுடன் முடிந்திருக்கும்....


காதலியிடம் இருந்து கடிதம் வராதா?
காத்துக்கிடந்த கட்டிளம் காளைகள்.

காதலனின் பதில் இன்னும் வரலையே...
பரிதவிக்கும் பெண்புறாக்கள்.


பெண் பார்த்து விட்டு....
‘போய் கடுதாசி போடுகிறோம்.....இது
பெரியோர்களின் பண்பான புத்திசாலித்தனம்.


காதல் கவிஞர்கள் உருவாக
காரணமான கடிதங்கள்.


ஆடு மாடு அன்பைக்கூட
அக்கறையுடன் விசாரித்த கடிதங்கள்.


பொங்கல்.... தீபாவளிக்கு.....
போஸ்ட் மேன்களை
புலம்ப வைத்த வாழ்த்துக் கடிதங்கள்.


மொட்டை கடுதாசி என்ற பெயரில்
மனிதனின்
முழு நிம்மதியைக் கெடுத்த கடிதங்கள்.


போடாமலே
போட்டு விட்டதாய்
பொய் கோபம் காட்ட வைத்த கடிதங்கள்.

ஒரே பக்கத்தை
ஓராயிரம் முறை
படிக்க வைத்த கடிதங்கள்.

முதல் கடிதம்
தப்புத் தப்பாய் எழுதி....
வேண்டாத இடத்தில் கால் போட்டு
வேண்டிய இடத்தில் கால் உடைத்து....
பழையதை படிக்கும் போது....
புன்னகை பூக்க வைத்த கடிதங்கள்............................


இப்படி

சங்கதிகளையும்.... சாதாரணங்களையும்...

சுகங்களையும்....சோகங்களையும்...

சுமந்து வந்த கடிதங்கள்

காலப்போக்கில்... காணாமலேயே...போய்விட்டது.

விவரமான விலாசங்கள் சூம்பிப்போய்

இமெயில் ஐடியாய்

ஒற்றை வரியில் ஒளிந்துக்கொண்டன.

வளர்ந்து விட்ட உலகில்

தொலைந்துப்போன ஒரு வார்த்தையில்

ஒன்றாகிப்போனது-

கடிதம்.



நான்...
                                                                                                                             


                                                                                                                             
                                                                                                                                         இப்படிக்கு,












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!