புதன், டிசம்பர் 05, 2012

கிராமத்து கவிஞர்கள்


கிராமத்து கவிஞர்கள்

காதலன் :

kingrajasc.blogspot.in/


கண்ணே நீ ஒரு புக்கு
உன் மனதை படிக்கத்தெரியாத
நான் ஒரு மக்கு.

கண்ணே நீ ஒரு மண்
என் மனதை ஆக்காதே புண்.

கண்ணே நீ ஒரு சட்டி
என் மனதை ஏன் போட்டு வைத்தாய் கட்டி ?

கண்ணே நீ ஒரு அடுப்பு
என்னிடம் ஏன் காட்டுகிறாய் வெறுப்பு ?

உங்க அண்ணன் பேரு தாஸ்
நீ வச்சிருக்க பஸ் பாஸ்
என்னை நீ வேண்டாமுனு சொன்னா
நான் ஆயிடுவேன் தேவதாஸ்.

கண்ணே நீ கட்டுவது தாவணி
நம்ம கல்யாணம் வச்சிக்கலாமா ஆவணி ?நான் உன் காதலன் ஆக- நீ
எனக்குப்போடு பாஸ்மார்க்,
உன் இதயத்தில் எனக்குப்போடு புக்மார்க்:
இல்லனா நான் தினமும் போவேன் டாஸ்மார்க்.

கண்ணே நீ ஒரு செருப்பு
என்னிடம் ஏன் காட்டுகிறாய் வெறுப்பு ?

நான் தினமும் தூங்குவது பாய்
நீ தான் எனக்கு ஐஸ்வர்யா ராய்.கண்ணே நீ ஒரு ரஸ்க்
உனக்காக என்ன வேணும்னாலும்
நான் எடுப்பேன் ரிஸ்க்.

கண்ணே நீங்க வச்சிருக்கிறது இட்லி கடை
உன்னாலே நான் தினமும் போறேன் பிராந்திக்கடை.

கண்ணே நீ ஒரு மின்சாரம்
எனக்கு ஆகிறாயா சம்சாரம் ?

நீ ஒரு பட்டாம்பூச்சி
என் கேள்விக்கு பதில் என்ன ஆச்சி ?

காதலி :

எலேய் என் கையில் இருக்குது ‘பேக் 
உன்ன பாத்தாலே புரியுது
நீ ஒரு பேக்கு.

நீ ஒரு ஊசிப்போன பூந்தி
உன்ன பாத்தாலே எனக்கு வருது வாந்தி.

என் தம்பி பேரு சிம்பு
எடுத்துனு வருவான் பெரிய கம்பு
உதை வாங்க உனக்கு இருக்கா தெம்பு?.

கடைசியா சொல்றேன்
போடா வெளக்கென்ன
நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?......4 கருத்துகள்:

 1. அருமை அருமை
  இப்படி சரளமாக வார்த்தைகள் வந்து
  கொட்டுவதற்கு அதிக பயிற்சியும்
  அதிக முயற்சியும் வேண்டும்
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. காதலன் காதலி உரை வெகு சுவார்யஸ்யமாகவே இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா அருமையான கவிதைகள், படபடவென வார்த்தைகள் வந்து விழுகிறது, தொடருங்கள். மனம் நிறைந்த பாராட்டுகள்.

  எனது பக்கமும் வந்து போகவும்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றிகள்...பலப்பல....

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!