ஞாயிறு, டிசம்பர் 02, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்-


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்........

இது தாங்க கதை. 
                      ஒரு ஊர்ல நம்ம நாயகன் படிக்கிறாரு.
அவரு பேரு மாதேஷ். நம்ம நாயகிப்பேரு தமிழ். வில்லன் இருதயம்.கலாட்டா படிப்பு அப்படி இப்படினு ஜாலியா போயினு இருக்கும்போது தான் கதையின் மையக்கரு வருது. “அதாவது நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்.
நாயகன் :


      நல்ல துடி துடிப்பான பையன். நல்ல நிறம். அதிக குறும்புத்தனம் கொண்டவன். நல்ல நடிப்பு இருக்கு.நாயகி:
            மிக மிக அழகானவள்.
 படத்தின் பாணியிலே வர்ணிக்கணும்னா அட்டை முதல் கடைசி பக்கம் வரை சுவராசியம் மிகுந்தவள்.

வில்லன் :          கொஞ்சநஞ்சம் அல்ல அதிக கோபக்காரன். பார்க்க வில்லத்தனம் தெரியலனாலும் அடி உதைக்கு அப்பப்ப பஞ்சம் இருக்காது. முகத்தில் வில்லத்தனம்  காட்டி சும்மா மிரல வைக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகமிக நல்ல மனிதன்.
மற்ற சைடு ஆக்ட்டர்ஸ் :
                          எல்லாரும் தத்தம் வேலையை சரியாக செய்கிறார்கள்.

கதைக்கு வருவோம் :
                   மிக சுவராசியம் இல்லனாலும் சுமாரான கதை. சிரிப்பிற்க்கு பஞ்சம் இல்லை. நல்ல நகைச்சுவை ஆங்காங்கே சிதறி இருக்கும்.
ஒரு நாள் வகுப்பறையில் வில்லன்(ஆசிரியர்) பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நல்ல கருத்துள்ள கதைப்பாடம், பாடம் நடத்தி முடித்து பயிற்சிப் பகுதிகளை எழுதிப்போட்டு அனைவரையும் புத்தகத்தில் குறித்துக்கொள்ளச்செய்தார்.........அப்ப “டேய் உன் புத்தகத்தை காட்டுடா ? சரியா எழுதி இருக்கியானு பாக்கலாம் என (ஆசிரியர்) வில்லன் கேட்க நாயகன் மாதேஷ் புத்தகத்தை நீட்டுகிறார்.
அதை வாங்கிப்பார்த்த வில்லனுக்கு (ஆசிரியர்) மிகவும் கோபம் வந்து விட்டது. "என்னடா புத்தகத்தை இப்படி கிழிச்சி  வச்சி இருக்க ? நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...... என கேட்க..... “சார்  என் தம்பி கிழிச்சிட்டான் சார் என அழுதான்...
.சரி சரி நாளைக்கி ஒட்டி எடுத்துட்டு வரணும் என்று கண்டிப்புடன் வில்லன் கூற “சரி சார் என அமர்ந்துக்கொண்டான்....
அப்ப ஒரு மாணவன் எழுந்து “சார் என் புஸ்தகத்தையே காணோம் சார் 

என கூற  வில்லன் ரொம்ப டெங்சன் ஆகி "மரியாதையா, எவன் எடுத்தானோ அவன் கொடுத்திடுங்க இல்லனா நடக்கிறதே வேற" என மிரட்டுகிறார்....இப்படியாக போகிறது  வகுப்பறை பாடங்கள்.....
அப்ப நாயகி: அட நம்ம தமிழ் புக் தாணுங்க.........
பின் குறிப்பு :
      சாரி சார் நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கல.பார்த்தாலும் விமர்சனம்  எழுதுற அளவுக்கு எனக்கு திறமை பத்தாது . இது என் வகுப்பறையில் நடந்த உண்மை நிகழ்ச்சி............அந்த வில்லன் நாந்தேன்....ஹி....ஹி......
                        


1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!